புதுதில்லி:
இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் ஜனவரி 1 புதனன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தில்லியில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் பிபின் ராவத் மரியாதை செலுத்தினார். வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தெற்கு கட்டிட வளாகத்தில் உள்ள அலுவலகத்துக்கு சென்று முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.பின்னர்அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முப்படைகளின்முயற்சிகளை ஒருங்கிணைப்பதிலும், முப்படைகளும் ஒரேகுழுவாக இணைந்து செயல்படுவதிலும் அதிகம் கவனம் செலுத்தப்படும் என்றார்.அரசியலில் இருந்து பாதுகாப்புப் படைகள் நீண்ட தூரம் விலகியிருப்பதாகவும், மத்தியில் ஆட்சியிலிருக்கும் அரசின் உத்தரவுக்குட்பட்டே பாதுகாப்புப் படைகள் செயல்படுவதாகவும் கூறிக்கொண்டார். வரும்காலத்திலும் அதேபோல்தான்பாதுகாப்புப் படைகள் செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.