tamilnadu

img

இன்னும் 73 நாட்களில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்ற செய்தி தவறானது...  சீரம் இன்ஸ்ட்டியூட் விளக்கம்

தில்லி 
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசின் பெயர் கோவிஷீல்ட். இந்த தடுப்பூசி தயார் நிலையில் இருப்பதாகவும், இன்னும் 73 நாட்களில் மருந்து சந்தை மூலம்  மக்களுக்கு கிடைக்கும் எனவும், இந்த தகவல் பிரபல மருத்துவத்துறை நிறுவனமான  சீரம் இன்ஸ்ட்டியூட் கூறியுள்ளது என செய்தி வெளியாகியது. 

இதனால் மக்கள் சந்தோஷத்தில் ஆழ்ந்தனர். ஆனால் அந்த சந்தோசம் சிறிதுநேரம் கூட நிலைக்கவில்லை. காரணம் இந்த தகவல் பொய்யானது என  சீரம் இன்ஸ்ட்டியூட் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறியதாவது,"73 நாட்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி கிடைக்கும் என்ற செய்தி தவறானது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். 3-ஆம் கட்ட பரிசோதனைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த தடுப்பூசி எப்பொழுது கிடைக்கும் என்பதை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்" எனக் கூறியுள்ளது.