tamilnadu

img

பாஜக அரசுகளுக்கு தொழிலாளர் நல அமைச்சகம் கண்டிப்பு தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய முடியாது!

புதுதில்லி, மே 24- தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய் யும் உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் பாஜக அரசுகளின் முயற்சிக்கு மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, நாட்டின் தொழிற்துறை உற்பத்தி, வர்த்தகம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளதைக் காரண மாகக் காட்டி, தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக் கட்டும் முயற்சியில், 11 மாநில அரசுகள் இறங்கின.  இவற்றில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிர தேசம், குஜராத், ஹரியானா, உத்தரகண்ட், அசாம், இமாசல பிரதேசம், கோவா ஆகிய 8 மாநி லங்கள் பாஜக ஆட்சியில் இருப்பவை. காங்கி ரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்கள் 2 (ராஜஸ்தான், பஞ்சாப்), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலம் 1 (மகாராஷ்டிரா). வேலைநாளை 12 மணிநேரமாக அதிக ரிப்பது, மிகை உழைப்புக்கான ஊதியத்தை ரத்து செய்வது என்று அவசரச் சட்டத் திருத்தங்களை யும் கொண்டுவந்தன.

இந்த வகையில் உத்த ரப்பிரதேசத்தில் மட்டும், 44 தொழிலாளர் சட்டங்க ளில் 38 சட்டங்கள் 3 ஆண்டுகளுக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களின் சட்டத் திருத்தங்களுக்கு மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், “இது சரியான நடவடிக்கை இல்லை. ஒரு மாநி லத்தில் தொழிலாளர் நல சட்டத்தை அடியோடு நீக்கும் சட்ட மசோதாவை எப்படிப் பிறப்பிக்க முடியும்? இந்த சட்ட நீக்கத்தால் யாருக்கு நன்மை கிடைக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விவகாரத்தில், அமைச்சகம் பதில் அறிக்கை தயார் செய்து வருவதாகவும், விரை வில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மாநிலங்களின் மசோதா குறித்து அரசியல மைப்பு சட்ட நிபுணர் கவுதம் பாட்டியா அளித் துள்ள பேட்டி ஒன்றில், “மாநிலங்களின் புதிய சட்ட மசோதாக்கள் குறித்து, குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்பார்.

அதனடிப்படையில் மசோதாவை அவர் ஒப்புக் கொள்ளவில்லை எனில், அது மாநிலங்களுக்கே திருப்பி அனுப்பப்படும்” என்று கூறியுள்ளார்.  “மாநிலங்களின் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா சட்டப்படி செல்லாது என்பதால் இவற்றை மத்திய அமைச்சரவை ஏற்காது” என்றும் தெரிவித்துள்ளார். “ஒரு அரசியல் சட்டத்தை மாநில அரசின் திருத்த மசோதா மூலம் மாற்றி விட முடியாது” என தொழிலாளர் நலச் சட்ட வழக்கறிஞர் ராம ப்ரியா கோபாலகிருஷ்ணனும் கூறியிருக்கிறார். ஏற்கெனவே ஒரு சில மாநில அரசுகள், தொழிலாளர் நலச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

1919 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் இந்தியா கையெ ழுத்திட்டது. அதில் கையெழுத்திட்ட அனைத்து நாடுகளும் வேலை நேரத்தை வாரத்திற்கு 48 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்றா லும், 60 மணி நேரத்தில் வைத்திருக்க இந்தியா வுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. எனவே, இந்தியாவில் மாநில அரசுகளின் நடவடிக்கை ஐ.எல்.ஓ. மாநாட்டிற்கும் முரணானது என்பது குறிப்பிடத்தக்கது.