புதுதில்லி, ஏப்.3- கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு உற்பத்தி வீழ்ச்சியால், 8 முக்கியத் துறைகளின் வளர்ச்சி விகிதம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 2.1 சதவிகிதம் குறைந்துள்ளது.நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை வாயு, சுத்திகரிப்பு பொருட் கள், உரம், இரும்பு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 முக்கிய கட்டமைப்புத் துறைகளில் கடந்த 2018 பிப்ரவரியில் 5.4 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்தது. கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும்சுத்திகரிப்பு பொருட்கள் வளர்ச்சி முறையே 6.1 மற்றும் 0.8 சதவிகிதமாக இருந்தது. ஆனால், 2019 பிப்ரவரியில் உரம்உற்பத்தி வளர்ச்சி 2.5 சதவிகிதம், இரும்பு உற்பத்தி 4.9 சதவிகிதம், சிமெண்ட் உற்பத்தி 8 சதவிகிதம், மின்துறையின் வளர்ச்சி 0.7 சதவிகிதம் என்று குறைந்துள்ளது. நிலக்கரி உற் பத்தி (7.3 சதவிகிதம்), இயற்கை வாயு உற்பத்தி (3.8 சதவிகிதம்) மட்டும் சற்று வளர்ச்சியைக் கண்டுள் ளது.