tamilnadu

img

அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொண்ட மகாராஷ்டிர ஆளுநர் அகற்றப்பட வேண்டும்

சிபிஎம் கோரிக்கை

மும்பை, டிச. 7 - அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்து  கொண்ட மகாராஷ்டிர ஆளுநர் பதவியி லிருந்து நீக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகா ராஷ்டிர மாநிலக் குழு கோரியுள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர சாங்கம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகாராஷ்டிர மாநிலக் குழு சார்பில் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கி, மாநில செயலாளர் நரசய்யா ஆதம், மத்தியக் குழு உறுப்பினர்கள் டாக்டர் அசோக் தாவ்லே, மகேந்திர சிங், ஜே.பி. கேவிட், மரியம் தாவ்லே முதலானோர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறப்பட்டி ருப்பதாவது:

முற்றிலும் கொள்கையற்ற, மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத, பாஜக தலைமையிலான தேவேந்திர பட்னா விஸ்-அஜித் பவார் அரசாங்கம் ராஜினாமா செய்திடக் கட்டாயப்படுத்தப்பட்ட நிலை உரு வானதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வர வேற்றுள்ளது. வரவேற்கப்படக்கூடிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கிணங்க, அரசமை ப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், ஜனநாயக விரோதமாகவும், ஒருதலைப்பட்சமாகவும், பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்ச ரின் கட்டளைக்கிணங்க செயல்பட்ட மகா ராஷ்டிர மாநில ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.

சிபிஎம் கலந்து கொள்ளவில்லை

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அதி காரத்திற்கு பாஜக வராமலிருப்பதை உத்தர வாதப்படுத்துவதற்காக, புதிதாக சிவ சேனை – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டாக அமைந்துள்ள மகா ராஷ்டிர விகாஷ் அகாதி அரசாங்கம் அமைக்கப்படுவதை எதிர்ப்பதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்தி ருக்கிறது. எனினும், மகாராஷ்டிர ஆளுநரால் நவம்பர் 26 அன்று வெளியிடப்பட்ட கடி தத்தில் கூறப்பட்டுள்ளது போன்று, மும்பை யில் அன்றைய தினம் ஓட்டல் டிரிடெண்ட் டில் நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ-யோ அல்லது கட்சித் தலைவர்களோ கலந்துகொள்ள வில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தெள்ளத்தெளிவானமுறையில் விளக்கிட விரும்புகிறது. முந்தைய பாஜக தலைமையிலான ஆட்சி கடைப்பிடித்த கொள்கைகளிலி ருந்து, புதிய அரசாங்கம், தன்னை முற்றிலு மாக முறித்துக்கொண்டு, கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர் பார்க்கிறது.

விவசாயிகள் கடன் தள்ளுபடி

  • பருவம் தவறி பெய்த மழையின் காரண மாக பாதிப்புக்கு உள்ளான பயிர் நாசத் திற்கும், பெரிய அளவில் சேதம் ஏற் பட்டிருப்பதற்கும் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும்.
  • எவ்வித முன்நிபந்தனையும் விதிக்காது விவசாயிகளின் அனைத்துக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
  • வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் ஆணையத்தின் பரிந்துரையின் படி விவசாய விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் போது விவசா யத்திற்கான செலவினத்துடன் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித் திட வேண்டும். அதற்கேற்றவிதத்தில் போதுமான அளவு போனசும் வழங்கிட வேண்டும்.
  • மாநிலம் முழுவதும் வன உரிமைச் சட்டத்தை உடனடியாகவும், கறாராகவும் அமல்படுத்திட வேண்டும். பழங்குடியின ரை வெளியேற்றும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நலச்சட்டங்களை விரோதச் சட்டங்களாக மாற்றக்கூடாது

  • அனைத்து விவசாயத் தொழிலா ளர்களுக்கும், முறைசாராத் தொழிலா ளர்களுக்கும், திட்டப் பணிகளில் வேலை செய்திடும் தொழிலாளர்களுக்கும், பீடி, கைத்தறி, விசைத்தறி மற்றும் கட்டு மானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழி லாளர்களுக்கும், ஒப்பந்தத் தொழிலா ளர்களுக்கும், கேசுவல் தொழிலா ளர்களுக்கும் மாதந்தோறும் 21 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதியமாக வழங்கிட வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களைத் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றக் கூடாது. சங்கங்கள் அமைப்பதற்கு தொழிலாளர்களுக்கு உள்ள உரிமையிலும் மாற்றம் எதை யும் செய்யக் கூடாது. வீதிகளில் பொருள் களை சுமந்து சென்று கூவி விற்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்க ளையும் பாதுகாத்திட வேண்டும்.
  •  மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் தீவி ரமான முறையில் விரிவாக்கப்பட வேண்டும். நகர்ப்புற வேலையின்மை யைக் குறைத்திட சிறப்புத் திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். வேலை யில்லா கால நிவாரணம் மாதந்தோறும் 5,000 ரூபாய் வழங்கிட வேண்டும்.

அனைவருக்கும் ரேசன்

  • கல்வி, சுகாதாரம், வீட்டு வசதிக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டை கூர்மையாக அதிகரித்திட வேண்டும். இவற்றைத் தனியாரிடம் தாரைவார்க்கும்  போக்கை கைவிட வேண்டும். ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டத்திற்கு அரசாங்க மானியத் தொகையை அதிகரித்திட வேண்டும்.
  • பொது விநியோக முறையை சீரமை த்திட வேண்டும். உணவு தானியங்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள் கள் குறைந்த விலைகளில் வழங்கப்பட வேண்டும். அனைவருக்கும்  ரேசன் அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.
  • வயது முதிர்ந்த அனைவருக்கும்,  அநாதைகளுக்கும் மாதந்தோறும் 3,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட வேண்டும்.


பெண்கள், சிறுபான்மையினர் தலித், பழங்குடியினர் நலம்

  • பெண்கள், சிறுபான்மையினர், தலித்து கள், பழங்குடியினருக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடும் கயவர்களுக்கு எதிராகவும், மதவெறித் தீயை விசிறிவிடுபவர்களுக்கு எதிராக வும், மதச்சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிராக வெறுப்பை உமிழ்பவர்களுக்கு எதிராகவும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக  மேற் கொள்ள வேண்டும். நலிவடைந்த பிரி வினரை மேலே தூக்கிவிடக்கூடிய விதத்தில் சிறப்புத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். முஸ்லிம்க ளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வேண்டும். அரசுப் பணிகளில் உள்ள தலித்/பழங்குடியினர் காலி யிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
  • மேட்டுக்குடியினருக்கு ஆதரவான, விவசாயிகள் விரோத, பழங்குடியினர் விரோத மோடி அரசாங்கத்தின் திட்டங்க ளான மும்பை-அகமதாபாத் புல்லட் டிரெயின், மும்பை-வதோதரா எக்ஸ்பிரஸ் வே, வாத்வான் துறைமுகப் பணிகள் ரத்து செய்யப்படவேண்டும் மற்றும் நிறுத்தப்பட வேண்டும்.

மீண்டும் விசாரணை

  • நீதிபதி லோயா சந்தேகமான முறையில் மரணம் அடைந்திருப்பது தொடர்பாக பாரபட்சமற்ற முறையில் மீண்டும் புலன் விசாரணை முழுமையாக மேற் கொள்ளப்பட வேண்டும்.
  • பீமா கொரேகான் தாக்குதலில் பொய்யாக புனையப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும். அவற்றில் கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக் கான தலித்துகள் மற்றும் தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
  • டாக்டர் நரேந்திர தபோல்கர் மற்றும் தோழர் கோவிந்த் பன்சாரே கொல்லப் பட்ட வழக்குகளில் முழுமையாகப் புலன் விசாரணை மேற்கொண்டு இவை தொடர்பாக விரைவு நீதிமன்றங்கள் அமைத்து, குற்றமிழைத்த கயவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
  • ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மை யையும் எவ்விதச் சமரசமுமின்றி பாது காத்திட வேண்டும்.

​​​​​​​மேற்கண்ட நியாயமான கோரிக்கைக ளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் போராட்டங்களைத் தொடரும். இவ்வாறு சிபிஎம் மாநில செயலாளரும், மத்தியக்குழு உறுப்பினர்களும் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.