tamilnadu

img

ஆளுநர் அனுமதி தேவையில்லை

முன்னாள் கேரள ஆளுநர் பி.சதாசிவம்

புதுதில்லி, ஜன.21- மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்ற த்தில் வழக்கு தொடுக்கும் விவரம் ஆளுநரை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என வும், அது அரசமைப்பு சாசன கடமை அல்ல, மாறாக மரியாதை நிமித்தம் வேண்டுமா னால் தெரிவிக்கலாம் என முன்னாள் கேரள ஆளுநர் பி.சதாசிவம் கூறினார்.

கே.பராசரன்

இப்படி ஒரு நடைமுறை அரசமைப்பு சாசனத்தில் கூறப்பட வில்லை என்பதை முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.பராசரன் தெளிவுபடுத்தி யுள்ளார். மத்திய அரசின் பிரதிநிதிதான் ஆளுநர். எனவே, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்ப தற்கு முன்பு அவரை அணுக வேண்டுமா? அவரால் இதுதொடர்பாக உள்துறை  அமைச்சகம் வரை மட்டுமே செல்ல முடியும் எனவும் பராசரன் கூறினார்.

ஓ.ராஜகோபாலன் (பாஜக)

சொந்த கருத்துகளை வெளிப்படையாக கூறித் திரியாமல் ஆளுநர் நிதானம் கடைப்பிடிக்க வேண்டும் என பாஜக மூத்த  தலைவர் ஓ.ராஜ கோபாலன் எம்எல்ஏ தெரிவித்தார். ஒவ்வொரு  பதவிக்கும் என்னென்ன அதிகாரம் உள்ளது என அரசமைப்பு சாசனம் வரையறுத்துள்ளது. சச்சரவுகளுக்கு தீர்வு காணும் வழியும் உள்ளது. அதற்கு மாறாக பாரஸ்பரம் சவால் விடுப்பதும் வெளிப்படையாக கருத்து மோதலில் ஈடுபடுவதும் சரியல்ல என அவர் கூறினார்.