புதுதில்லி, ஏப்.10-இந்தியத் தேர்தல் ஆணையம் மீது, இதுவரை இருந்துவந்த நம்பகத்தன்மை அண்மைக்காலத்தில் கேள்விக்குறியாகி விட்டதாகவும், இது ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, பிரதமர் மோடி மற்றும் ஆளும் பாஜக-வினர் தொடர்ந்து நடத்தைவிதிகளை மீறிவரும் நிலையில், தேர்தல்ஆணையம் உறுதியான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.தங்களின் இந்த குற்றச்சாட்டை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராஆகியோருக்கு கடிதமாகவும் அனுப்பி வைத்துள்ள அதிகாரிகள், தற்போதைய மக்களவைத் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா? என்ற சந்தேகமும் தங்களுக்கு எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜிலியோ ரிபெய்ரோ, முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர மேனன், தில்லியின் முன்னாள் ஆளுநர் துணைநிலை நஜீப் ஜங், டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் ராகுல் குல்லார், முன்னாள் பாதுகாப்புத் துறைசெயலாளர் கேசவ் தேசிராஜூ, முன்னாள்பிரசார் பாரதியின் சிஇஓ ஜவஹர் சிர்கார்,முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி மீரன்போர்வன்கர் உள்ளிட்ட 66 அதிகாரிகள், இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள் ளனர்.“எத்தனையோ பெரிய சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்தபோதும், தேர்தல்களை நேர்மையாக நடத்தியதற்கான கௌரவத்தை இதுவரை இந்திய தேர்தல் ஆணையம் கொண்டிருந் தது. ஆனால் இன்று அதன் நம்பகத்தன் மைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம், நியாயம்,பாரபட்சமின்மை மற்றும் திறமை ஆகியவை சமரசம் செய்து கொள்ளப்பட்டுள் ளது. தேர்தல் நடைமுறைதான் இந்திய ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானம் ஆகும். ஆனால், அந்த தேர்தல் நடைமுறையின் நேர்மைக்கே தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது” என்று ஐஏஎஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.“ஐஏஎஸ் அதிகாரிகளின் குழு என்றஅடிப்படையில் தங்களுக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை என்றாலும், கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் தேர்தல் நடத்தை குறித்து, தங்களதுகுழுவில் இடம்பெற்றுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் ஆய்வு செய்து வருகின்றனர்” என்றும் தெரிவித்துள்ளனர்.தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க மறுக்கும், ஆளும் பாஜக-வின்விதிமீறல்களையும் ஐஏஎஸ் அதிகாரிகள் வரிசைப்படுத்தி, தங்களின் புகாரில் பட்டியலிட்டுள்ளனர்.“கடந்த மார்ச் 27ஆம் தேதியன்று இந்தியாவின் முதல் ‘ஏ-சாட்’ ஏவுகணைசோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட் டது. இதை பொது அறிவிப்பாகப் பிரதமர்மோடி வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான நேரம் கேள்விக்குரியது.ஏப்ரல் 11-ஆம் தேதியன்று ‘பிஎம்நரேந்திர மோடி’ திரைப்படம் வெளியாகவுள்ளதாக ஊடக செய்திகள் வாயிலாக அறிகிறோம். பின் வாசல் வழியாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாகத்தான் இதைக் கருதுகிறோம்.இதேபோல பிரதமரின் வாழ்க்கையை மையப்படுத்திய வெப்சீரிஸின் முதல் ஐந்து எபிசோடுகளும் ‘எரோஸ் நவ்’ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ் விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மார்ச் 31ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட ‘நமோ டிவி’ விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் மெத்தனமாகச்செயல்பட்டு வருகிறது. இதற்கு மத்தியதகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறப்படவில்லை. இந்த சேனல் எல்லா சந்தாதாரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது ஜனநாயக விதிமுறைகளை மீறுவதாகும்.ஆந்திர மாநிலத்தின் தலைமைச் செயலாளரையும், மூன்று தலைமை காவல் துறை அதிகாரிகளையும், மேற்குவங்கத்தின் நான்கு தலைமை காவல் துறை அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவுபிறப்பித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில்குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள டிஜிபிக்கு (டி.கே.ராஜேந்திரன்) இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை என்பது வியப்பூட்டுகிறது. அவரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்துகோரிக்கை எழுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.‘நாட்டின் பாதுகாப்புப் படைகள் எல்லாம் நரேந்திர மோடியின் படைகள்’ என்று அண்மையில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இதேபோல பாஜகவின் மூத்த பொறுப்பாளரான முக்தார் அப்பாஸ் நக்வியும் பேசியுள்ளார். இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகள் எல்லாம்மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கான திட்டம் என்றும் பாதுகாப்புப் படைகளின் பாரம்பரியத்தை அரசியலாக்கும் திட்டமாகவும் இதைக் கருதுகிறோம்.ஏப்ரல் 1ஆம் தேதியன்று மகாராஷ்டிராவின் வர்தா பகுதியில் நரேந்திர மோடியின் பேச்சை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். “காங்கிரஸ் இந்துக் களை அவமதித்தது. இந்தத் தேர்தலில் காங்கிரசை மக்கள் தண்டிக்க வேண்டும். பெரும் பாலான இந்துக்கள் வசிக்கும் தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிட அஞ்சுகின்றனர். அதனால்தான் சிறுபான்மையினர் அதிகமாக வாழும் பகுதிகளில் காங்கிரஸினர் போட்டியிடுகின்றனர்” என்று மோடி பேசியதாக ஊடகச் செய்திகளின் வாயிலாக அறிகிறோம். இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுகளெல்லாம் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும். எந்தக் கட்சியும்,வேட்பாளரும் சாதிகள், மதங்கள், சமூகங்கள், மொழியினக் குழுக்களிடையே பதற்றத்தை உருவாக்கும் வகையிலோ, வெறுப்பைத் தூண்டும் வகையிலோ பேசக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதிகளில் மிக முக்கியமானது.”இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.