புதுச்சேரி, ஏப்.18-தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ராஜ்பவன் தொகுதி புஸ்ஸி வீதியிலுள்ள பொதுப்பணித் துறை கழிவுநீர் அலுவலகத்தில் அமைக்ப்பட்ட வாக்குசாவடியில் வாக்கு அளித் தார். காங்கிரஸ் பிரதேச கமிட்டி தலைவர் அமைச் சர் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ ஆகியோர் உடன் வந்திருந்தனர்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாராயணசாமி,“ காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங் கத்தின் வெற்றிக்காக கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து வெற்றிக் காக பாடுபட்டோம். சென்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு அமோக ஆதரவு இருந்தது” என்றார்.மோடியை பிரதமர் பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் பிரதிபலிக்கிறது. ஏனெனில் அவர் நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டார். ராகுலை பிரதமராக்க வேண்டும் என்ற எண் ணம் மக்களிடம் ஓங்கி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பல்வேறு அரசு பதவிகளில் அலங்கரித்தவர். பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்த அவருக்கு அதிக அனுபவம் இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சி வேட்பாளருக்கு மருத்துவ கல்லூரி உரிமையாளர் என்ற ஒரு தகுதியை தவிர வேறு எந்த தகுதியும் இல்லை என்றும் பாஜக கூட்டணிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் எதிர்க்கட்சி தலைவர்களின் (கனிமொழி, துரைமுருகன்) வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தி உள்ளனர். மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல் என்றும் அவர் கூறினார்.எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், “ரங்கசாமி பாஜக கூட்டணியில் தான் இடம் பெற்றுள்ளார். வருமான வரித்துறை யார் வசம் உள்ளது? என்றும் 2016- ஆம் ஆண்டு நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் நடந்த போது எனது வீட்டில்கூட வருமான வரி சோதனை நடந்தது என்று தெரிவித்தார்.