tamilnadu

img

வாக்கு எந்திரம் மீதான சந்தேகம் தீர்ந்ததாக ஆணையம் தகவல்

புதுதில்லி:
விவிபாட் எனப்படும் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் வாக்குகள் சரிபார்க்கப்பட்டதன் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த குறைபாடும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் முறைகேடு நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.இதையடுத்து யாருக்கு வாக்களித் தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் எந்திரம் மூலம், பதிவாகும் 50 சதவீத வாக்குகளை  சரிபார்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் ஒரு சட்டசபைத் தொகுதியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 விவிபாட் வாக்குப் பதிவு சீட்டுக்களை எண்ணி க்கைக்கு எடுத்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டதுபோல் வாக்குகள் எண்ணப் பட்டன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள், ஒப்புகைச் சீட்டுஎந்திரம் மூலம் சரிபார்க்கப்பட்ட தாகவும், இதில் ஒரு இடத்தில் கூடஎவ்வித முரண்பாடும் கண்டுபிடிக்கப் படவில்லை என தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.