tamilnadu

img

அப்பாவிகளைத் துன்புறுத்த வகைசெய்யும் பிரிவுகளை நீக்க வேண்டும்: சிபிஎம்

தொற்று நோய்கள் (திருத்த) அவசரச்சட்டம்

புதுதில்லி, ஏப்.26- 2020, தொற்று நோய்கள் (திருத்த) அவசரச்சட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ள போதிலும், அதில் சில ஷரத்துக்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் வலி யுறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத் தில் ஈடுபட்டிருக்கும் சுகாதார ஊழியர்களைப் பாது காப்பதை நோக்கமாகக் கொண்டு, 2020, தொற்று நோய்கள் (திருத்த) அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தி ருப்பதை, சட்டப் பாதுகாப்பு அவர்களுக்கு அவசியம் தேவை என்பதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு வரவேற்கிறது.

எனினும், குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள அவ சரச் சட்டத்தில் சில ஆழமான பிழைகள் காணப்படுகின்றன. இச்சட்டத்தின் 3 (C) மற்றும் (D) ஆகிய பிரிவுகள், குற்றம் மெய்ப்பிக்கப்படும்வரை குற்றமற்றவராகவே கருதப்படு வார் என்ற முக்கியமான பிரச்சனை குறித்து, உலகம் முழு வதிலுமுள்ள நாடுகள் பின்பற்றும் பொதுவான சட்ட நடை முறைகளை மீறுகின்றன. நம் நாட்டில் குற்றவியல் நடை முறைச் சட்டத்தின் நடைமுறையையும் மீறுகிறது. இந்த இரண்டு பிரிவுகளும் ஒட்டுமொத்த அவசரச் சட்டத்தின் கொள்கையையே வீழ்த்திவிடுகின்றன. இவை, இச்சட் டத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கும், அப்பாவிகளைத் துன்புறுத்துவதற்கும், குறிவைத்துத் தாக்குவதற்கும் இட மளிக்கின்றன.

எனவே, இவ்விரு பிரிவுகளையும் இந்த அவசரச் சட்டத்திலிருந்து நீக்கிட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.