புதுதில்லி:
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில், இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கருதப்படும் கிறிஸ்டியன் மிஷெலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்குதில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு தொடர்பாக, கிறிஸ்டியன் மிஷெல் கடந்தாண்டு டிசம்பர்22 அன்று துபாயில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டார். இதைத்தொடர்ந்து, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவருடைய ஜாமீன்மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.இந்நிலையில், திகார் சிறையில் உள்ள கிறிஸ்டியன் மிஷெலிடம் விசாரணை நடத்ததில்லி நீதிமன்றத்திடம் அமலாக்கத்துறை அனுமதி கோரியிருந்தது. இதன் மீதான விசாரணை சனிக்கிழமையன்று சிபிஐ சிறப்புநீதிபதி அரவிந்த் குமார் முன்பு நடைபெற்றது.அப்போது, நவம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் திகார் சிறையில் வைத்து மிஷெலிடம் விசாரணை நடத்தஅனுமதியளித்தார். அதேசமயம், அமலாக்கத் துறை விசாரணை மேற்கொள்ளவுள்ள தேதிகளில் கிறிஸ்டியன் மிஷெலை அவரதுவழக்கறிஞர் 30 நிமிடங்கள் சந்திப்பதற்கும் அனுமதியளித்தார்.