tamilnadu

img

முன்னாள் பிரதமர்கள் இல்லாத இந்திய நாடாளுமன்றம்!

புதுதில்லி:
முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங் ன்றவர்கள் இல்லாத நாடாளுமன்றக் கூட்டத் தொடராக, தற்போதைய கூட்டத் தொடர் அமைந்துள்ளது.தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோர் கடந்த காலங்களில் பிரதமர் பதவியை இழந்தாலும், தொடர்ந்து எம்.பி.க் களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவையில் இடம்பெற்று வந்தனர். 

தேவகவுடா 1996 முதல்2019 வரை மாநிலங்களவைக் கும், மக்களவைக்கும் தொட ர்ச்சியாக தேர்ந்தெடுக்கப் பட்டு, சுமார் 23 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்து வந்தார். மன்மோகன் சிங் 1991-ஆம் ஆண்டு முதல் 2019 வரைசுமார் 28 ஆண்டுகள் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.ஆனால், 17-ஆவது மக்களவையில், தேவகவுடா தேர்தலில் தோற்றுப் போனதன்காரணமாகவும், மன்மோகன்சிங், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்து விட்டதன் காரணமாகவும், நாடாளுமன்றம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் முன்னாள் பிரதமர்கள் இல்லாத நாடாளுமன்றமாக தற்போதைய நாடாளுமன்றம் அமைந் துள்ளது.