அயோத்தி:
உத்தரப்பிரதேசத்தில், சாமியார் முதல்வரான ஆதித்யநாத், தான் ஆட்சிக்கு வந்தது முதல், மாடுகளைப் பராமரிப்பதில் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறார். தெருவில் திரியும் மாடுகளுக்கு பராமரிப்புக் கூடம்அமைத்தல்; தீவனம் வழங்குதல், ஆதரவற்ற மாடுகளை பராமரிப்போருக்கு மானியம் வழங்குதல் என்று பட் ஜெட்டில் கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கீடு செய்து, செலவிட்டு வருகிறார்.அந்த வகையில், கடும்குளிரில் இருந்து மாடுகளைக் காப்பாற்றுவதற்கு, ஸ்வெட்டர் வாங்கும் புதிய திட்டத்தை அயோத்தி நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மொத்தம் நான்கு கட்டங்களாக இந்த திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறும் அயோத்தி நகராட்சி, முதற்கட்டமாக பைசிங்பூரில் ஆயிரத்து 200 மாடுகளுக்கும், 700 காளைகளுக் கும் ஸ்வெட்டர் வாங்க நிதி ஒதுக்கியுள்ளது.ரூ. 250 முதல் 350 ரூபாய் வரையிலான விலையில், கடும் குளிரையும் சமாளிக்கும் வகையில் இந்த ஸ்வெட் டர்கள் தயாரிக்கப்பட உள் ளதாக கூறப்படுகிறது. மாடுகளைப் போன்று, 100 கன்றுகளுக்கும் ஸ்வெட்டர் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப் பட்டுள்ளது.அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில காங்கிரஸ்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள் ளது. குளிரில் வாடும் பள்ளி மாணவிகளுக்கு ஸ்வெட்டர் வாங்கிக்கொடுக்காத மாநிலஅரசு, மாடுகளுக்கு ஸ்வெட்டர்கொடுப்பதில் ஆர்வம் காட்டுகிறது என்று விமர்சித்துள்ளது.