tamilnadu

img

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1%-க்கும் குறைவான நிதி ஒதுக்கீடு!

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில், மதுரையில் அமையவிருக்கும் கட்டிடத்திற்கு மட்டும் 1%-க்கும் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மொத்தம் 1,977.8 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், இதுவரை 12.35 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நிறைவடையும் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் கட்டுமான பணிகள் இதுவரை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.