புதுதில்லி:
மத்திய பாஜக அரசின் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவர மோசடிகளை, அந்த கட்சியின் மூத்ததலைவரும், தற்போதைய எம்.பி.யுமானசுப்பிரமணியசாமி, ஒரு பொருளாதார பேராசிரியர் என்ற வகையில் கேள்விக்குஉட்படுத்தியுள்ளார்.
புகழ்பெற்ற பொருளாதார பேராசிரியர் என்று பெயரெடுத்தும், மத்திய நிதியமைச்சர் பதவி தனக்கு வழங்கப்படவில்லை என்று நீண்டகாலமாகவே சுப்பிரமணியசாமி ஆதங்கத்தில் இருந்து வருகிறார். மோடியின் முதலாவது ஆட்சிக்காலத்தில், அருண் ஜெட்லி நிதியமைச்சர் ஆக்கப்பட்டார். அப்போது, தகுதியே இல்லாதவருக்கு பதவி தரப்பட்டுள்ளதாக பொருமிய சுப்பிரமணியசாமி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரை, வாருவதற்கும் தயங்கியதில்லை.
பின்னர், மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்திலாவது, அமைச்சராக்கப்படுவோம் என்று எதிர்பார்த்தார். ஆனால், அதுவும் நடக்கவில்லை. இந்தமுறை, நிர்மலா சீதாராமன் அவரிடம்சிக்கிக் கொண்டார். இவரும் முறைப் படி பொருளாதாரம் படிக்காதவர்.எனவே, நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டைத் தாக்கல் செய்யட்டும் அப்புறம் பார்த்துக் கொள்கிறேன் என்று காத்திருந்த சுப்பிரமணியசாமி, தற்போது மோடிஅரசின் பட்ஜெட் அறிவிப்பில் இருக்கும்ஜம்பங்களையும், புள்ளிவிவர மோசடிகளையும் ட்விட்டர் பக்கத்தில் அம்பலப் படுத்தி, பழிவாங்கியிருக்கிறார்.“நான் எந்த மக்கள் பக்கம் இருந்துஇந்த பட்ஜெட் குறித்து கருத்து கூறுவது?ஒரு பொருளாதாரப் பேராசிரியராக அணுகுவதா? அல்லது கட்சியின் எம்.பி.என்ற ரீதியில் இந்த பட்ஜெட்டை பார்ப்பதா? எந்தப் பக்க நியாயத்தை எடுத்துரைப்பது?” என்று கேள்விகளை எழுப்பியிருந்த சுப்பிரமணியசாமி, கடைசியில், ஒர பொருளாதார பேராசிரியராக புள்ளி விவரங்களுக்குள் புகுந்து,நிர்மலா சீதாராமனின் தப்புக்கணக்குகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை, பத்தி 8-இல்“இந்தியாவின் ஜிடிபி கணக்குப்படி உலகிலேயே 6-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது; வாங்கும் திறன் அடிப்படையிலான ஜிடிபி-யின் படிபார்த்தால் ஏற்கெனவே இந்தியா அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து 3-வதுஇடத்தில் இருக்கிறது” கூறப்பட்டிருந்தது.இதனைப் பிடித்துக் கொண்ட சுப்பிரமணியசாமி, “இந்த இரண்டில் ஒன்று தானே சரி. இரண்டுமே சரியாக இருக்க முடியாதே,” ஏன் இந்த ஏமாற்று வேலை என விமர்சித்துள்ளார்.
அதேபோல பட்ஜெட் உரையின் பத்தி 10-இல் “இந்தியப் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் டாலர் மதிப்பைத் தொட55 ஆண்டுகள் ஆனது; இன்று நாம்3 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்டபொருளாதாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறப்பட்டிருப்பது.இதனையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட சுப்பிரமணியசாமி “இந்தியப் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் டாலரைத் தொட எந்த ஆண்டில் இருந்து, எந்த ஆண்டு வரை 55 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது..? மே 26, 2019-இல் தான் இந்தியப் பொருளாதாரத்தில் 1 ட்ரில்லியன் டாலர் அதிகரித்ததா..? இப்போது 3 ட்ரில்லியன் டாலர் மதிப்புகொண்ட பொருளாதாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார்களே.. அப்படி என்றால் மே 26, 2019-இல் இருந்து வெறும் 6 வாரத்தில், இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு இன்னும் ஒரு ட்ரில்லியன் டாலர் அதிகரித்து விட்டதா...?” என்றுஅடுக்கடுக்கான கேள்வி எழுப்பி அதிர்ச்சி தந்துள்ளார். இந்த பதிவின்முடிவில் “ஹரே ராம்..!” என்று பதிவிட்டும் மோடி அரசைக் கிண்டலடித்துள்ளார்.விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்ற ஜம்பத்தையும் சுப்பிரமணியசாமி விட்டுவைக்கவில்லை.
“விவசாயிகளுக்கான வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கு காலத்தை 2018-இல் இருந்து 2022-ஆக உயர்த்தி இருக்கிறார்கள். அப்படி என்றால் அடுத்த நான்கு ஆண்டுகளில் (2019-ஐயும் சேர்த்து) விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்பட வேண்டும். இதன்படி ஆண்டுக்கு 18 சதவிகிதம் கூட்டுவட்டி விகிதத்தில் விவசாயிகள் வருமானம் அதிகரித்தாக வேண்டும்.ஆனால். உண்மையில் ஆண்டுக்கு 2 சதவிகிதம்தான் விவசாயிகள் வருமானம் அதிகரிக்கிறது” என்று கூறிவிட்டு, இதன் முடிவிலும் “நல்ல கனவு”என்று தனது தாக்குதலை தொடுத்துள்ளார். ப்பிரமணியசாமியின் இந்த பதிவுகள் பாஜக வட்டாரத்திற்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மோடி தன்னை பயன்படுத்தி கொள்ள மறுப்பதாகவும் இதனால் சீனாவுக்கு செல்ல போகிறேன் என்றும் சுப்பிரமணியசாமி 2 நாட்களுக்கு முன்பு டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.