tamilnadu

img

ரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படுமாம்- சுப்பிரமணியன் சுவாமி உளறல்

ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் இந்தியப் பொருளாதாரம் மேம்படும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உளறி உள்ளார். 
கடந்த செவ்வாய்க்கிழமையன்று மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தர் குறித்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது இந்தோனேசிய பணத்தில் விநாயகர் படம் அச்சிடப்பட்டிருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, "இந்தக் கேள்விக்கு பிரதமர் மோடிதான் பதிலளிக்க வேண்டும். நான் இதை ஆதரிக்கிறேன். விநாயகர் தடைகளை நீக்குபவர். இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் இந்தியப் பொருளாதாரம் மேம்படலாம். இதைப் பற்றி யாரும் மோசமாக உணரக்கூடாது என்று உளறினார்.  சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்துக்கு பொருளாதார நிபுணர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.