tamilnadu

img

மாநிலங்களை ஒழிக்கும் நடவடிக்கையே காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிப்பு

சென்னை கூட்டத்தில் அருணன் குற்றச்சாட்டு

சென்னை,அக்.13- மாநிலங்களை ஒழிக்கும் முதல் நடவடிக்கை தான் காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிப்பு என்று பேராசிரியர் அருணன் குற்றம்சாட்டி னார். காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்ற தலைப்பில் கண்டனக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை (அக். 12)  நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேராசிரியர் அருணன் பேசுகையில் காஷ்மீரில் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, 370 சிறப்பு பிரிவு நீக்கப்பட்டு 68 நாட்கள் கடந்த நிலை யில், தற்போது மத்திய அரசு ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் இணைய வசதி கொடுக்கலாமா என ஆலோ சிக்கிறார்களாம்.காஷ்மீரின் முக்கிய தொழிலாக விளங்குவது சுற்று லாதான். இணைய வசதி இல்லாத தால் சுற்றுலா பயணிகள் தற்போது வருவதில்லை. இப்போதுதான் ஒரு சில பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

370ஆவது சிறப்பு பிரிவை நீக்கு வோம் என பாஜக கூறியது. ஆனால் மாநில அந்தஸ்த்தை பறிப்போம் என தேர்தல் அறிக்கையிலோ அல்லது தலைவர்களோ கூறவில்லை. மாநிலங்கள் எல்லாம் இணைந்தது தான் இந்தியா. ஆனால் பாஜக அரசு மாநிலங்களை துச்சமென மதிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். மாநிலங்கள் தேவை யில்லை என தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சித் தலை வர் ஜவா`ஹிருல்லா பேசுகையில் இந்தியாவில் ஒற்றுமையாக வாழக் கூடிய மக்களை, சகோதரத்துவத்து டன் நேசிக்கக் கூடிய மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தி சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தப் பார்க்கிறார்கள். பட்டேல் நாட்டின் முதல் பிரதமாராக இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்சனைக்கு அன்றே தீர்வு கண்டிருப்பார் என்றும், காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தா னோடு இருந்திருக்காது என மோடி யும் பாஜகவினரும் கூறுகிறார்கள். பட்டேல் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தானோடு காஷ்மீர் சென்றிருக்கும். நேருவும், பட்டேலும் இணைந்து உருவாக்கியதுதான் 370ஆவது சிறப்பு பிரிவு. இந்த உண்மைகளை மறைத்து மக்களிடத்திலே தவறான பிரச்சாரத்தை பாஜகவினர் செய்து வருகிறார்கள். தேர்தல் நடத்தாமலே ஆட்சியை பிடிக்க நிபுணத்துவம் பெற்றுவிட்டோம் என ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் கூறுகிறார். இவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது என்றார்.

ஜெயக்குமார்

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார் பேசுகையில்,ஒரு மக்களவை உறுப்பினர் மத்திய அரசை விமர்சித்து பேச முடியாத அளவிற்கு நமது ஜனநாயகம் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் ஆதரித்து பேசுபவர்களுக்கு அதிக நேரமும், விமர்சனம் செய்பவர்க ளுக்கு குறைந்த நேரமும் ஒதுக்கப்படு கிறது. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பாஜகவும் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி நாட்டை துண்டாட நினைக்கின்றன. தமிழகம் பெரியார், அம்பேத்கர் மண். இங்கு பாஜகவின் சித்து விளையாட்டு எடு படாது. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட மண்டல் கமிஷனை எதிர்த்த வர்கள்தான் பாஜகவினர். பாஜக, ஆர்.எஸ்.எஸ். தாழ்த்தப்பட்ட பழங்குடி யின, உழைப்பாளி மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதை சாதி, மத வித்தியாசமின்றி அனைவரும் ஒன்றிணைந்து முறியடிப்போம் என்றார்.

இனிகோ இருதயராஜ்

கிறித்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் பேசுகையில்,காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியுள்ளது. 7 பேருக்கு ஒரு ராணுவ வீரர், சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். காஷ்மீருக்கு தனிக் கொடியா எனக் கேட்கும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் இதுநாள் வரை தேசியக் கொடி ஏற்றியதில்லை, காவிக் கொடி யைத்தான் ஏற்றுகிறார்கள். ஆக்கிர மிப்பு காஷ்மீரைத்தான் மீட்கப் போகிறார்கள் என நினைத்தால், நம்முடன் இருந்த காஷ்மீரையே மீட்டு விட்டு, காஷ்மீரை மீட்டுவிட்டோம் என தம்பட்டம் அடிக்கிறார்கள் என்றார்.

தாவூத்மியாகான்

கல்வியாளர் தாவுத்மியாக்கான் பேசுகையில், சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது நாடு பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.கோவா உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 12 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளதை கூறாமல் காஷ்மீருக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள தாகவும், அதை நீக்கி விட்டதாகவும் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று சாடினார்.

வன்னியரசு

விசிக பொதுச் செயலாளர் வன்னியரசு பேசுகையில், பாஜக- சிவசேனா ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும்  60க்கும் மேற்பட்டோர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பினை தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்படுகிறது. பினை வழங்கக் கூடாது என பாஜக அரசு நிர்ப்பந்தம் கொடுக்கிறது. அதை ஏற்காமல் 5 நீதிபதிகள் ராஜினாமா செய்துள்ளதை சுட்டிக்காட்டினார். முன்னதாக இரா.தெ.முத்து வரவேற்றார். கூட்டத்தை ஒருங்கிணை ப்பாளர் உதயகுமார், எம்.ராமகிருஷ்ணன், ஜி.செல்வா ஆகி யோர் ஒருங்கிணைத்தனர். மூத்த பத்திரிகையாளர் அ.குமரேசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.