tamilnadu

img

ஆந்திராவில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு...

அமராவதி 
தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 1000-க்குள் இருந்த நிலையில், கடந்த ஒருவார காலமாக கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கு மேல் (சராசரியாக) உள்ளது. இதுவரை அங்கு 53 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 696 பேர் பலியாகியுள்ள நிலையில், 24,228 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், ஆந்திராவில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவில் தற்போது கொரோனா மூர்க்கமான வேகத்தில் பரவி வருகிறது. இந்த காலகட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது அம்மாநில மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.