திருவனந்தபுரம்:
கேரளத்தில் சனிக்கிழமையன்று மேல்நிலைத் தேர்வு முடிந்ததோடு, மாநிலத்தில் பள்ளி அளவிலான அனைத்து தேர்வுகளும் நிறைவடைந்தன. முதல் கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் “முதல் பெல்” திங்களன்று ஒலிக்க உள்ளது. கைட் விக்டேர்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் குழந்தைகள் ஆன்லைன் படிப்பு அறைக்குள் நுழைவார்கள். எஸ்எஸ்எல்சி, மேல்நிலை மற்றும் விஎச்எஸ்இ தேர்வுகளை 13 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி, தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பும்வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முக கவசம் மற்றும் சுத்திகரிப்பு வசதி உறுதி செய்யப்பட்டது.மாணவர்கள் சுகாதாரத் துறையின் முன்னறிவிப்புகளை பின்பற்றினர்.எஸ்எஸ்எல்சி தேர்வு எழுத பதிவுசெய்த 4,22,450 மாணவர்களில், 4,22,112 (99.91 சதவீதம்) பேர் தேர்வு எழுதினர். பிளஸ் டூவில் 4,52,572, பிளஸ் ஒண்ணில் 4,38,825,மாணவர்களும் விஎச்எஸ்இ-யில் 55,794 மாணவர்களும் தேர்வு எழுதினர். விடைத்தாளின் இரண்டாவது மதிப்பீடு திங்கட்கிழமை தொடங்கும்.