பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு, பல ஆண்டுகளாக அதிகரித்தே வந்த நிலையில், அதுவும் 2020-21 நிதியாண்டில்அது குறைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.பள்ளி கல்வி மற்றும் கல்வியறிவுத் துறைக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி 59 ஆயிரத்து 845 கோடி ரூபாயில், 17.16 சதவிகிதம் பட்டியல் வகுப்பினர் துணைத் திட்டத்திற்கு (SCSP) ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய ஆண்டில்ஒதுக்கப்பட்ட 18.14 சதவிகிதத்தை ஒப்பிடும்போது, தற்போது1 சதவிகிதம் வரை ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கும் முன்பு 10.3 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதுதற்போது 9.8 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப் பாக, கல்வியில் பின்தங்கிய வடகிழக்கு மண்டலத்திற்கு (NER) முந்தைய ஆண்டில் 9.2 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 8.7 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் பள்ளிக்கல்விச் சேர்க்கை திருப்தியாக இருந்தாலும், இடைநிலைக்கல்வி மட்டத்தில், 21.8 சதவிகிதம் பேர் இடைநிற்றலுக்கு உள்ளாகின்றனர். எஸ்.டி. மாணவர்களைப் பொறுத்தவரை 22.3 சதவிகிதமாக இடைநிற்றல் உள்ளது. இந்நிலையில், துணைத்திட்டதிற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்திருப்பது, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.