மாணவர்களை தேர்வுக்குத் தயார்படுத்தும் பயிற்சிமையங்களுக்கு, ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்களிக்க வேண்டும் என ஜிஎஸ்டி மேல்முறையீட்டு ஆணையத்தின் ஆந்திரப் பிரிவில் (Authority for Advance Rulings) மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், பயிற்சி வகுப்புகள் பிரதான கல்விச் சேவையில் சேராது என்பதால், 18 சதவிகித ஜிஎஸ்டி கட்டாயம் என்று தீர்ப்புஅளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கும் கூட ஜிஎஸ்டி செலுத்தியாக வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.