திருவனந்தபுரம்:
பாலியல் துன்புறுத்தல்களை வெட்கமின்றி நியாயப் படுத்தியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா வருத்தம் தெரிவித்துள்ளார். முற்றிலும் பெண்ணிய எதிர்ப்புபேட்டிக்கு சமூக ஊடகங்களிலும், சமூகத்திலும் பரவலானஎதிர்ப்புக்குரல் எழுந்ததைத் தொடர்ந்த ஒருநாள் தாமதமாக தனது முகநூல் பதிவில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவரது முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று(செப்.8) செய்தியாளர்கள் கூட்டத்தில் வந்த கேள்விக்கு பதிலளிக்கும்போது இத்தனை காலமும் மனதில் தோன்றாத கருத்தை கூறினேன் என்பது மீண்டும் அதைக் கேட்டபோது புரிந்தது. அத்தகைய ஒரு கருத்து என்னிடமிருந்து எப்போதும் வந்திருக்க கூடாது. இத்தகைய அரசியல் அறிவுடன் நான் இத்தனை காலம் செயல்பட்டு வந்துள்ளேன். ஆனாலும் இதற்கு காரணமான வார்த்தைகளை திரும்ப பெறுவதுடன் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு சென்னித்தலா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். எனது வார்த்தைகளிலிருந்து ஒரு பகுதியை எடுத்து எனக்கு எதிராக தவறான பிரச்சாரம் செய்திருந்தாலும், பெண்கள்மனதில் சிறிதளவு கீறல்கூட ஏற்படக்கூடாது என்பதில் எனக்குகட்டாயம் உள்ளது. அத்தகைய சில செயல்பாடுகள் கவனத்தில் பட்டது. எனது பொது வாழ்க்கையில் ஒருமுறைகூட பெண்களுக்கு எதிராக மோசமான கருத்து என்னிடமிருந்து வந்ததில்லை எனவும் சென்னித்தலா குறிப்பிட்டுள்ளார்.