tamilnadu

img

‘ஜெய் ஸ்ரீராம்’ கூறுமாறு மதரசா ஆசிரியர் மீது தாக்குதல்!

புதுதில்லி:
‘ஜெய் ஸ்ரீராம்’ கூறச்சொல்லி, மதரசா ஆசிரியர் மீது, இந்துத்துவா கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் புதுதில்லியிலுள்ள ரோஹினி செக்டார் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

முகமது மோமின் என்பவர் மதரசா ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் வியாழனன்று மாலை 7 மணியளவில் நடைபயிற்சி சென்றபோது, கார் ஒன்று மோதுவது போல் வந்து அருகில் நிறுத்தப் பட்டுள்ளது. பின்னர் அதிலிருந்து இறங்கிய 3 பேர், மவுலானா மோமினிடம் சென்று கைகுலுக்கி, வம்பு இழுக்கும் தோரணையில், ‘நலமாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டுள்ளனர். 
அவர்களின் உள்நோக்கத்தை அறியாத மோமினும், அல்லாவின் கருணையால் (இன்ஷா அல்லா) நலமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதைடுத்து, மோமினிடம் அராஜகமாக நடந்துகொள்ள ஆரம்பித்த அந்த 3 பேரும், தங்களின் காரில் எழுதப்பட்டிருந்த ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வார்த்தையைச் சொல்லுமாறு, மிரட்டியுள்ளனர். மோமின் மறுக்கவே, அவரைக் கடுமையாகத் தாக்கி, ஒருகட் டத்தில் தூக்கி வீசியுள்ளனர். இதில் சாலையில் விழுந்து படுகாயமடைந்த மோமின் மயக்கம் அடைந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.தற்போது, மவுலானா மோமின் அளித்த புகாரின்பேரில், இந்தியத் தண்டனைச் சட்டம் 323-ஆவது பிரிவின் கீழ் (அற்ப வழக்கு) போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். (ந.நி.)