tamilnadu

img

பாஜக அமைச்சரைக் காப்பாற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு...

புதுதில்லி:
குஜராத் மாநிலத்தில் 2017-ஆம் ஆண்டு தோல்கா சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் பூபேந்திரசிங் சௌடசாமா வெற்றிபெற்றது செல்லாது என்று மே 12 அன்றுகுஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.429 அஞ்சல் வாக்குகளை எண்ணாமல் அதிகார துஷ்பிரயோகம் செய்தது;வாக்கு எண்ணிக்கையை பதிவு செய்தவீடியோ முழுமையாக இல்லாதது; பூபேந்திர சிங்கின் தனிச் செயலாளர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அடிக்கடி வந்து சென்றதற்கான சிசிடிவி பதிவுகள் ஆகியவற்றை ஆதாரமாக எடுத்து நீதிமன்றம் இந்த தீர்ப்பைவழங்கியது.

தற்போது குஜராத் மாநில சட்டம் மற்றும் கல்வித்துறை அமைச்சராக உள்ள பூபேந்திரா சிங்கின் பதவி, உயர்நீதிமன்றத் தீர்ப்பால் கேள்விக்குறியானது. பதறிப்போன அவர், உச்ச நீதிமன்றம் சென்றால் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மே 15 அன்றுஉச்சநீதிமன்றத்திற்கு ஓடினார். நினைத்தது போலவே, அவரது நம்பிக்கை வீண்போகவில்லை.

பூபேந்திரா சிங்கின் மனுவை உடனடியாக விசாரித்த உச்சநீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குஇடைக்காலத் தடைவிதித்துவிட்டது.“கொரோனாவுக்கு எதிராக குஜராத் மாநில அரசு போராடிக் கொண்டிருக்கையில், மாநில கல்வி மற்றும் சட்ட அமைச்சரை பதவி இழக்கச் செய்தது பாதிப்பை உண்டாக்கும்” என்று என்னென்னவோ சொல்லி பூபேந்திரா சிங் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்
களை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம்இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

இதனால் பாஜக அமைச்சர் மிகுந்தமகிழ்ச்சி அடைந்துள்ளார்.தமிழகத்தில் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கைமுறைகேட்டு வழக்கிலும், இதேபோல உச்சநீதிமன்றத் தடைபெற்ற அதிமுக
வின் இன்பதுரை, தொடர்ந்து எம்எல்ஏவாகவே வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.