tamilnadu

img

சானிட்டைசர், முகக்கவசத்திற்கு வரி.... மோடி அரசின் நல்லெண்ணம்

புதுதில்லி:
கொரோனா வைரஸ் வேகமாக இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் நிலையில் இந்த தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு தேவைப்படும் சிலபொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

வறுமைக்கு எதிராகப் போராடும் மக்கள், தூய்மைக் காவலர்கள் பயன்படுத்தும் சோப்புகள், முகமூடிகள், கையுறைகள் போன்றவற்றிக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. சானிட்டைசருக்கு 18 சதவீதம், முககக் கவசங்கள் 5 சதவீதம், திரவநிலை கைகழுவும் நாசினிகளுக்கு 18 சதவீதம், பரிசோதனை கருவிகளுக்கு 5 சதவீதம், ரத்தம் பரிசோதனை செய்யும் ஸ்ட்ரிப்-க்கு 12 சதவீதம் மருத்துவத் துறை சார்ந்த ஆக்ஜிசன் சிலிண்டர், ஹைட்ரஜன் பெராக்சைடுக்கு 12 சதவீதம், மருத்துவமனை படுக்கைகளுக்கு 18 சதவீதம், உயிர்காக்கும் மருந்துகளுக்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. 

-காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவிலிருந்து....