பல கோடி ரூபாய் செலவில் தில்லியில் பணிகள் தீவிரம்
புதுதில்லி, ஜன.16- ஆர்எஸ்எஸ் அமைப்பானது, புது தில்லியில் கார்ப்பரேட் அலுவலகங்களின் பாணியில், அதிநவீன வசதிகளுடன் 3 அலுவலகங்களைக் கட்டி வருவ தாக அண்மையில் செய்திகள் வெளி யாகியுள்ளன. அதில், கடந்த 2016 முதல் நடை பெற்று வரும் இக்கட்டுமானப் பணியில், 12 மாடிகளைக் கொண்ட முதலாவது அலு வலக கட்டுமானப்பணி விரைவில் முடி வடைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனம் அல்ல. இதனால் ஆர்எஸ்எஸ் எந்த தணிக்கைக்கும் உட் படுத்தப்படவில்லை. வருமான வரிச் சட்டத்தின் கீழும் இல்லை. அது எவ்வாறு நிதியைத் திரட்டுகிறது என்று யாருக்கும் தெரியாது. எனினும், ஆர்எஸ்எஸ் அமைப்பு, ஒவ்வொரு அலுவலகத்தையும் பல கோடி ரூபாய் மதிப்பில், மொத்தம் 3 அலுவலகங்களை தலைநகர் புது தில்லியில் கட்டி வருவதாக அந்த செய்தி கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பணக்காரக் கட்சியான பாஜக, 2016-ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர், நாடு முழு வதும் மாவட்டத் தலைநகரங்களில் சொந்த மாக நிலம் வாங்கி அலுவலகம் கட்டும் பணியில் இறங்கியது. தில்லியிலும் பிரம் மாண்டமான அலுவலகத்தை கட்டி கோலா கலமாக திறப்பு விழா நடத்தியது. இதனையொட்டியே தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பும் தில்லியிலேயே 3 அலுவலகங்களைக் கட்டத் துவங்கி யுள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக வத், கடந்த 2016 நவம்பரில் தில்லி ஜாண்டே வளனில் சுமார் 3.5 லட்சம் சதுர அடி பரப்ப ளவில் அமையும் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். 12 மாடிகளைக் கொண்ட இந்த கட்டடத்தின் பணிகள் 80 சத விகிதம் வரை முடிந்துள்ளன. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியபோது, இந்த கட்டடத்தில்தான் மோகன் பகவத் தனது செய்தியாளர் சந் திப்பை நடத்தினார். ஆர்எஸ்எஸ்-ஸின் தலைமையகம் நாக்பூர்தான் என்றாலும், நாட்டின் தலை நகரான தில்லியிலிருந்தே முக்கிய முடிவு கள் எடுக்கப்படுவதால், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பரிவாரங்களுக்கு தில்லி யிலும் அலுவலகங்கள் கட்டப்படுவதாக கூறப்பட்டுள்ளது. சங்கத்தின் ஒவ்வொரு வேலையும் சமூகத்தின் ஆதரவால் செய்யப்படுகிறது. நன்கொடைகள், காசோலைகள் மூலமாக மட்டுமே பெறப்படுகின்றன. சங்கத்தின் நலம் விரும்பிகள் யாவரும் அதில் பங்க ளிப்பு செய்கிறார்கள் என்று ஆர்எஸ்எஸ்-ஸின் அலுவலக பொறுப்பாளர், ஐஏ என்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரி வித்துள்ளார்.