புதுதில்லி:
2019 -20 நிதியாண்டிற்கான, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி கணக்கில் வராமல் விடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.பிரதமரின் பொருளாதார ஆலோ சனைக் குழுவில் இடம்பெற்றிருக்கும் ரதின் ராய் என்பவர்தான், தற்போது இதனைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார்.பட்ஜெட்டில் பயன்படுத்தப்படும் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, கடந்த 2018 - 19ம் ஆண்டில் அரசின் வருவாய் 17.3 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், பொருளாதார அறிக்கையில் 15.6 லட்சம் கோடி என்று விவரம் தரப்பட்டுள்ளது. அப்படியானால் 1.7 லட்சம் கோடி எங்கே போனது? - இதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்.
பட்ஜெட் என்பது திருத்தப்பட்ட மதிப்பீடுகளை (Revised Estimates) பயன்படுத்துகிறது. ஆனால், பொருளா தார சர்வே என்பது, இடைக்கால இருப்பை (Provisional Actuals) பயன்படுத்துகிறது. இதுவே அரசாங்க கணக்கு வழக்கின் துல்லியமான மதிப்பீடாக பார்க்கப்படுகிறது.இந்நிலையில், பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அரசின் வருவா யைக் காட்டிலும், பொருளாதார அறிக்கையில், அரசின் வருவாய் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி குறைந்துள்ளது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.வருவாய் கணக்கில் மட்டுமல்ல, செலவின கணக்கிலும் குளறுபடி நடந்துள்ளது. பட்ஜெட்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி 2018-19ம் ஆண்டு மொத்த செலவினம் 24.6 லட்சம் கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதார ஆய்வு அறிக்கையில் 23.1 லட்சம் கோடியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது, 1.5 லட்சம் கோடி வித்தியாசம் உள்ளது.
வரி வருவாயில் தான் கணக்கு குளறுபடி நடந்துள்ளதாக தெரிகிறது. அதாவது, கடந்தாண்டு வரி வருவாய் 14.8 லட்சம் கோடியாக பட்ஜெட்டில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், பொரு ளாதார ஆய்வு அறிக்கையில் வரி வருவாய் 13.2 லட்சம் கோடி என்று சொல்லப்பட்டுள்ளது.“பட்ஜெட் கணக்கு குளறுபடிகள், பெரும் கவலைக்குரிய விஷயம். இதை சரி செய்திருக்க வேண்டும். எப்படி நடந்துள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும்” என்று தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் முன்னாள் தலைவர் பிரணாப் சென் கூறுகிறார்.பொருளாதார மற்றும் திட்டமிடல் ஆய்வு மையத் தலைவர் ஜெயதி கோஷூம், இதனை முக்கியப் பிரச்சனை யாக பார்க்கிறார்.“பொருளாதார ஆய்வு அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் சரி என்றால், புதிதாகத்தான் பட்ஜெட் விவரங்கள் தயார் செய்ய வேண்டும்; அந்த அளவுக்கு இந்த புள்ளிவிவர குளறுபடி உள்ளது” என்று அவர் தெரிவிக்கிறார்.இதுதொடர்பாக நிதியமைச்சகத்திற் கும் கேள்விகள் அனுப்பி வைக்கப்பட் டுள்ள நிலையில், அதற்கு இன்னும் பதில் கிடைத்ததாக தெரியவில்லை.