புதுதில்லி:
பிரதமர் அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பை நாட்டுமக்கள் யாரும் வரவேற்பதாக தெரியவில்லை என்று இந்தியாவின் பெருமுதலாளிகளில் ஒருவரும், பஜாஜ்ஆட்டோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான ராஜீவ் பஜாஜ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராஜீவ் பஜாஜ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்மேலும் அவர் கூறியிருப்பதாவது:ஊரடங்கு காரணமாகப் பல உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்து வரும் வேளையில், பஜாஜ் நிறுவனம்எந்த தொழிலாளரையும் வீட்டுக்குஅனுப்பாமல் ஊதியக் குறைப்பையும் அறிவிக்காமல் உள்ளது.
பல மேலைநாட்டு அரசுகள் தங்கள்நாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார நிவாரண திட்டங்களை அறிவித்து வருகிறது. அவற்றுக்கு நிறுவனங்கள் மற்றும் மக்களிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைக்கிறது. ஆனால், இந்தியா அறிவித்துள்ள ரூ. 20 லட்சம் கோடி நிவாரண திட்டங்களுக்கு அந்த அளவு ஆதரவு கிடைக்கவில்லை. நான் இதுகுறித்து பலருடன்பேசினேன். யாருமே இந்த திட்டங்க
ளைப் பிரமாதம் எனக் கூறவில்லை. மொத்தத்தில் இந்த திட்டங்கள் மக்களைச் சிறிதும் கவரவில்லை.
இந்த திட்டங்களுக்குப் பதிலாக, மக்களின் கையில் அரசு நேரடியாக பணத்தை அளித்திருக்க வேண்டும். அதுவும் ஏழை எளியோரிடம் பணம் அளிப்பது மிகவும் அவசியம் ஆகும்.அதைப்போல் புலம்பெயர் தொழிலாளர், இடம் மாறியோர் அனைவருக்கும்நேரடியாகப் பணம் அளிக்க வேண் டும்.ஊரடங்கால் சுமார் 12 கோடி பேர்வேலை இழந்துள்ளதாக நான் அறிந்தேன். இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமானதாகும்.நான் ஆஸ்திரியாவிலுள்ள இருசக்கர உற்பத்தியாளரான ஸ்டீபன் பியரரிடம் பேசும்போது, அவர் அந்நிறுவன ஊழியர்களின் ஊதியத்தில் 85 சதவிகிதப் பங்கை அந்நாட்டு அரசு,நிறுவனர்களுக்கு திரும்ப அளித்துவிடுகிறது எனத் தெரிவித்தார்.அரசால் தொழில் நிறுவனங்களின் தினசரி செலவை ஏற்க முடியாது என்பது உண்மைதான். அதே வேளையில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நிறுவனங்களுக்கு அரசுஉதவி செய்யலாம். ஏனோ இதுகுறித்து சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் வாய் திறக்காமல் உள்ளன.இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. சுதந்திர நாட்டில் நிறுவனங்கள் தங்கள்கருத்தைத் தெரிவிக்காதது சரியானதுஅல்ல.
நிவாரணம் குறித்து நாட்டில் உள்ளசாதாரண இளைஞர்கள், பெண்கள், ஏழைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் பேசி வருகின்றனர். ஆனால் தொழில்துறை, விளையாட்டுத் துறை,திரைத்துறை பிரபலங்கள் இதுகுறித்து வாயைக் கூடத் திறப்பதில்லை. ஒருவேளை அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படாமல் இருக்கலாம் போலிருக்கிறது.இவ்வாறு ராஜீவ் பஜாஜ் கூறியுள்ளார்.