tamilnadu

img

குஜராத் நிறுவனத்திற்கு ரூ.12 ஆயிரம் கோடி காண்ட்ராக்ட்... நண்பர்களின் ‘பைகளை’ நிரப்புகிறார் பிரதமர்

புதுதில்லி:
நாடாளுமன்றக் கட்டட புனரமைப்பு காண்ட்ராக்ட், குஜராத்தைச் சேர்ந்தஎச்.சி.பி. (HCP Design, Planning and Management Pvt. Ltd.) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.ஹஷ்முக் சி. படேல் என்பவருக்குச்சொந்தமான எச்.சி.பி. நிறுவனம், முதற்கட்டமாக திட்ட வடிவமைப்பை தயாரித்து வழங்க உள்ளது. இந்த வடிவமைப்பு வேலைகளுக்கு மட்டும் ரூ. 229 கோடியே 75 லட்சம் கட்டணம் நிர்ணயித்துள்ளது.இந்நிலையில், குஜராத் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள காண்ட்ராக்ட் மூலம், பிரதமர் மோடி அவரது கார்ப்பரேட் நண்பர்களின் ‘பைகளை’ நிரப்பப் பாடுபடுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அகில இந்திய ஊழல் சலவை இயந்திரம் இயக்கத்தில் உள் ளது. தில்லியின் மிக அழகான மற்றும் வரலாற்றுப் பகுதியை நாடாளுமன்ற வளாகத்திலிருந்து இந்தியா கேட் வரை அழகுபடுத்துவதற்கான ஒப் பந்தம் குஜராத்தி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது, மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 12 ஆயிரத்து 450 கோடி. மறுபுறத்தில் உத்தரப்பிரதேசத்தில் கரும்புவிவசாயிகளுக்கு வழங்காமல் உள்ளநிலுவைத் தொகை ரூ. 7 ஆயிரம் கோடி.பாஜக அரசு சுயநினைவை இழந்து வருகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. விவசாயிகளின் பிரச்சனைகளைப் புறக்கணிப்பதன் மூலம், அவர்கள் தங்கள் நண்பர்களின் பைகளை நிரப்புகிறார்கள்” என்று பிரியங்கா சாடியுள்ளார்.