புதுச்சேரி, ஆக. 13- சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிஐடியு பிரதேசப் பொருளாளர் பிரபு ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுச்சேரியில் அமையவுள்ள ஸ்மார்ட் சிட்டியால் சாலையோர வியா பாரிகளை உள்ளாட்சி நிர்வாகமும், காவல்துறையும் அப்புறப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும், சாலை யோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்தை அமல்படுத்த வேண்டும், வியாபாரி களுக்கு அரசின் சார்பில் அடையாள அட்டை வழங்கி அவர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன. சிஐடியு பிரதேசத் தலைவர் கே. முருகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் சினு வாசன், நிர்வாகிகள் மது, மதிவாணன், மணிபாலன், சாலையோர வியா பாரிகள் சங்கச் செயலாளர் அழகர் ராஜ், நிர்வாகிகள் ரவீந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் சிஐடியு தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருணை சந்தித்து கேரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.