புதுதில்லி, ஜன.16- கடந்த 2017 ஜனவரி யில் விரால் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பொறுப்பேற் றார். ஆனால், மோடி அர சுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த 2019 ஜூலை மாதமே அவர் பதவியை ராஜி னாமா செய்தார். அன்று முதல் அப்பதவி காலி யாகவே இருந்து வந்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி யின் செயல் இயக்குநராக வும், நிதிக் கொள்கை குழு வின் உறுப்பினராகவும் உள்ள மைக்கேல் பத்ரா வை துணை ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழ கத்தில் பொருளாதாரத் திற்கான முனைவர் பட்டம் பெற்றவரான பத்ரா, கடந்த 5 நிதிக் கொள்கை முடிவுகளில் ஆர்பிஐ ஆளு நர் எடுத்த வட்டிக்குறைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வாக்களித் துள்ளார்.