tamilnadu

img

தொழிற்சாலைகளுக்கான புதிய நெறிமுறைகள் வெளியீடு....

புதுதில்லி:
ஆந்திராவில் விஷவாயு கசிவால் உயிர்ப்பலிகள் ஏற்பட்டதன் எதிரொலியாக தொழிற்சாலைகளுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ஆர்.ஆர். வெங்கடாபுரம் கிராமத்தில் தனியார் ரசாயன தொழிற்சாலையில்  ஸ்டைரீன் என்ற ரசாயன வாயுகசிந்து, 16 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை  தொடர்ந்து, தொழிற்சாலை களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்தியஅரசு வெளியிட்டுள்ளது. மே 17 ஆம் தேதி வரை நாட்டில் ஊரடங்குஅமலில் இருக்கும்.  இதற்குப் பின்னர் செயல்படும் தொழிற்சாலைகள், பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதி செய்த பின்னரே உற்பத்தியை தொடங்க வேண்டும்.  முதலில் சோதனை ஓட்டமாகத்தான் தொழிற்சாலைகளை துவங்க வேண்டும்.முறையான மருத்துவப் பரிசோதனை களுக்கு பின்னரே தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.  தொழிற்சாலைகளில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.