புதுதில்லி:
கொரோனாவைக் காட்டி, “ஸ்டார்ட் அப்” நிறுவனங்களான ஸ்விக்கி, ஜொமாட்டோ, ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள், ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன.உணவு விநியோக நிறுவனங்களான ‘ஸ்விக்கி’ 1100 ஊழியர்களையும், ‘ஜொமாட்டோ’ 500 பேரையும் பணிநீக்கம் செய்துள்ளது.வாடகைக் கார் நிறுவனங்களான ‘ஓலா’ 1400 பேரை வெளியேற்றியுள்ள நிலையில், ஊபர்600 பேரின் வேலையைப் பறித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய டெக்ஸ்டைல் நிறுவனமான ரேமாண்ட், தனது நூற்றுக்கும் மேற் பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது என்றால், ‘இந்தியா புல்ஸ்’ வீட்டுவசதி நிறுவனம் 2000 பேரை வெளியேற்றியுள்ளது. லைவ்ஸ்பேஸ், ஷேர்சாட் போன்ற ஐ.டி. நிறுவனங்களும் ஆட்குறைப்பை செய்துள்ளன.தற்போது இந்த ஆட்குறைப்பு, பணிநீக்கம் தொடர்நிகழ்வாக மாறியுள்ளது.நிதித் தொழில்நுட்ப நிறுவனமான ‘லெண்டிங்கார்ட் டெக்னாலஜீஸ்’, தனது ஊழியர்களில் 30 சதவிகிதம் பேர்களை (சுமார் 200 பேர்) வெளியேற்றுவதாக அறிவித்துள்ளது.கார் விற்பனை இணையதளமான ‘கார் தேக்கோ’ நிறுவனம் 5000 ஊழியர்களில் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததுடன், மற்ற தொழிலாளர்களுக்கு ஊதிய குறைப்பையும் அமல் படுத்தியுள்ளது.
இந்நிலையில்தான், இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களான டாடா குழுமம், டிவிஎஸ் ஆகியவையும் ஊதியக்குறைப்பு நடவடிக்கைகையக் கையில் எடுத்துள்ளன.டாடா குழுமத்தின் மிகவும் லாபகரமான நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தில்தான் முதன் முதலில் சம்பளக் குறைப்பு அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைவரானராஜேஷ் கோபிநாத், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் 16 கோடியே 4 லட்சம் ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றிருந்தார். அதனை தற்போது 13.3 கோடி ரூபாயாககுறைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்தே, டாடா சன்ஸ், டாடா ஸ்டீல், டாடா பவர், டாடா மோட்டார்ஸ், டாடா இண்டர்நேஷனல், டாடா கேபிடல், வோல்டாஸ் மற்றும் இதர டாடா நிறுவனங்களின் நிர்வாகத் தலைவர்கள் மற்றும் சிஇஓ-க்களின் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளது. எடுத்த எடுப்பிலேயே சாதாரண ஊழியர்கள், தொழிலாளர்களின் ஊதியத்தில் கைவைக்காமல், மேல்மட்டத்திலிருந்து ஆரம் பிக்கும் ஏற்பாடாகவே இது பார்க்கப்படுகிறது. நாளடைவில் ஊழியர்களை நோக்கி சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு என்று வரலாம் என்று கூறப்படுகிறது.
இதேபோல, நாட்டின் முன்னணி இரு சக்கரவாகன நிறுவனமான டிவிஎஸ் நிறுவனமும், நிர்வாக மட்டத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு 5 முதல் 20 சதவிகிதம் வரையிலான ஊதியத்தைக்குறைத்துள்ளது. மே - அக்டோபர் மாதங்களில், டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 5 சதவிகிதமும், சீனியர் மேனேஜ்மெண்ட் பிரிவில் 15 முதல் 20 சதவிகிதமும் ஊதியம் குறைத்துவழங்கப்படும் என்றும், இது அடுத்த 6 மாதத்திற்குநடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட் டுள்ளது.தற்போது அறிவித்துள்ள சம்பளக் குறைப்புஅனைத்தும் நிர்வாகப் பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமே என்பதால், மற்ற தொழிலாளர்களின் சம்பளத்தில் எவ்விதமான மாற்றமும்இருக்காது என தற்காலிகமாக ஒரு ஆறுதலையும் அளித்துள்ளது.