tamilnadu

img

நாடு முழுவதும் ரேபிட் டெஸ்ட் நிறுத்தம்

தில்லி 
கொரோனா நோய் தொற்று இருப்பதை விரைவாகக் கண்டறிய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’  பரிசோதனை கருவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கருவியை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தவேண்டாமென தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்கள் துறையின் தலைவர் ராமன் ஆர் கங்ககேத்கர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரேபிட் கிட் மூலம் கொரோனா தொற்று பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், ரேபிட் கிட்டின் பரிசோதனை முடிவுகள் துல்லியமானதாக இல்லை எனக்கூறி இராஜஸ்தான் அரசு சோதனையை திடீரென நிறுத்திவைத்துள்ளது.

இந்த நிலையில் செவ்வாயன்று செய்தியாளர்களைச் சந்தித்த தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்கள் துறையின் தலைவர் ராமன் ஆர் கங்ககேத்கர், அடுத்த இரண்டு நாட்களுக்கு கொரோனாவைக் கண்டறிய ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம்.  ரேபிட் கிட் கருவிகள் மாறுபட்ட முடிவுகளைக் காட்டுவதாக கூறப்படுகிறது. இது குறித்து இரண்டு, மூன்று மாநில முதல்வர்களுடன் பேசினோம். அவர்களும் அதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

"இது ஒரு நல்ல விஷயம் அல்ல, ஏனென்றால் பெரிய மாறுபாடு காணப்படுகிறது. இது முதல் கட்ட சோதனையாக இருந்தாலும் நாம் அதன் தொழில்நுட்ப திறன் குறித்து ஆராயவேண்டும். இருப்பினும் ரேபிட் கிட் கருவியின் கண்டுபிடிப்புகளை புறக்கணிக்க முடியாது"."ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகளின் தரத்தை பரிசோதித்து வருகிறோம், மீண்டும் இந்தக் கருவிகளை கொண்டு சோதனையை தொடங்குவது பற்றி விரைவில் அறிவுறுத்தல் வழங்கப்படும் " என்றார்.