tamilnadu

img

ராமர் கோயில், சமஸ்கிருத வளர்ப்பு; பிரிவு 35 ஏ நீக்கம் இதுதான் பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ ‘ராமர்கோவில் கட்டுவோம்; சமஸ்கிருதம் வளர்ப்போம்’

புதுதில்லி, ஏப். 8 -

இப்போதோ, அப்போதோ என்று,பாஜகவினருக்கே எப்போது வரும் என்று தெரியாமல் இருந்த ‘சங்கல்ப் பத்ரா’ எனப்படும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை, ஒருவழியாக வெளியாகியுள்ளது. 48 பக்கங்கள் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையை, பிரதமர் மோடி திங்கட்கிழமையன்று தில்லியில் வெளியிட்டுள்ளார். அமித்ஷா, அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கான திட்டங்கள் குறித்து, புதிதாக எதுவும்சொல்லப்படாமல், முழுக்க முழுக்க அவர்களின் மதவெறி நிகழ்ச்சி நிரலையே அறிக்கையாக்கி வெளியிட்டிருப்பது, சமூக ஆர்வலர்கள் மத்தியில்கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அண்மையில் தேர்தல் அறிக் கைகளை வெளியிட்டிருந்தனர். 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம், விவசாயக் கடன் மற்றும்கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம், ஜிஎஸ்டி விகிதத்தை மாற்றியமைப்போம், நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்கப்படும், அரசுப்பணிக்கான தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை, மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்படும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 6ஆயிரம் உதவித்தொகை உத்தரவாதம் செய்யப்படும் என்று ஏராளமான வாக்குறுதிகளை அவர்கள் அளித்திருந்தனர்.ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அதுபோன்ற திட்டங் கள் எதுவும் இல்லை.மாறாக, “தேவையான அனைத்துநடவடிக்கைகளையும் எடுத்து விரைவாக ராமர் கோவில் கட்டப்படும். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் 35ஏ சட்டப்பிரிவு நீக்கப்படும்; நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்; முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்; குடியுரிமை திருத்த மசோதா (திருத்தம்) 2016 சட்டமாக்கப்படும். சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்சநீதிமன்றம் முன்எடுத்துரைத்து, அவற்றைப் பாதுகாப்போம்; சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்தும் முயற்சியாக பள்ளிகள்அளவில் கற்பித்தல் அதிகரிக்கப் படும்” என்று நாட்டை மத ரீதியாகபிளவுபடுத்தும் சதித் திட்டங்களையே, தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.போகிற போக்கில், நதிகள் இணைப்பு, நெடுஞ்சாலைகள் இணைப்பு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கை என்றுகடந்த முறை அளித்த வாக்குறுதிகளையும், அண்மையில் அறிவித்த விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்பதையும்புதிய வாக்குறுதிகள் போல ஆங் காங்கே பாஜக தூவி விட்டுள்ளது.இப்படியொரு மோசமான தேர்தல்அறிக்கையை எந்தக் கட்சியாலும் அளிக்க முடியாது என்ற அளவிற்கு இந்த அறிக்கை அமைந்துள்ளது.