புதுதில்லி:
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவிலிருந்து ராகுல் காந்தி பின்வாங்கக் கூடாது என்று பாஜக மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.“ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் தீவிரமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், ராகுலை மக்கள் நம்பத்தன்மையற்றவராக பார்க்கத் தொடங்கி விடுவார்கள். வேறு ஒருவர் தலைமையில் அல்லது எதாவது ஒரு ஏற்பாட்டில், சில நாட்களாவது, ராகுல் தலைமை இல்லாமல் காங்கிரஸ் கட்சி இயங்க வேண்டும்” என்று யஷ்வந்த் சின்கா குறிப்பிட்டுள்ளார்.
யஷ்வந்த் சின்கா, மோடி - அமித்ஷா மீதான அதிருப்தியால், கடந்த சில ஆண்டுகளாக பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றில் கடுமையான முறையில் எதிர்நிலை எடுத்தார். ரபேல் ஊழலில் மோடி அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் சென்றவர்களில் யஷ்வந்த் சின்காவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.