tamilnadu

சுற்றுலா பயணிகளிடம் பாலியல் அத்துமீறல் புதுச்சேரி காவலர்களை கைது செய்ய கோரிக்கை

புதுச்சேரி, மார்ச் 16- சுற்றுலாப் பயணிகளிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட காவல்துறையினரை கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- புதுச்சேரிக்கு கடந்த வாரம் புதன் கிழமை சுற்றுலா வந்த பயணிகளிடம் காவல் துறையினர் மிரட்டி பணம் பறித்ததுடன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா வரும் பயணிகளை பாதுகாக்க வேண்டிய  காவல்துறையே தொடர்ந்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது புதுச்சேரி மாநிலத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. புதுச்சேரியில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு புதுச்சேரி நகரப் பகுதியில் 3 சிறுமிகளை அடைத்து பாலியல் தொழில் நடத்துவதற்கு  காவல்துறை உடந்தையாக இருந்தது.  ஏட்டு முதல் ஆய்வாளர் வரை சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதும், ஏராளமானோர் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. 2015 ஆம் ஆண்டு காவல்துறையில் பணி யாற்றிய 8 பேரை பணியிருந்து நீக்க  காவல்துறை தலைமையகம் உத்தர விட்டது.

குற்றவாளிகளை சிபிசிஐடி காவல்  துறையினர் கைது செய்தனர். பின்னர் புதுச்சேரி அரசின் துணையுடன் 2019 ஆம் ஆண்டு அனைவரும் ஜாமினில் வந்த கொடூர மும் இங்கு நடைபெற்றது. இப்படியான செயல்கள் காவல்துறையில் உள்ள  சில தவறான நபர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் உள்ளது. அதன் தொடர்ச்சிதான் சுற்றுலாப் பயணிகளும் பாலியல் அத்து மீறல் சம்பவங்கள் நடைபெறுகிறது. புதுச்சேரி அரசு  விடுதியில் தங்கியி ருந்த சுற்றுலாப் பயணிகளிடம் முறை கேடாக நடந்துகொண்ட பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட பெரியகடை காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் சதீஷ்குமார், ரிசர்வ் பட்டாலின் காவலர் சுரேஷ் ஆகி யோரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும். இவர்களை கைது செய்ய வேண்டும். இவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் செயல்படும் காவல்துறையின் உயர்அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத் துகிறது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.