குடியுரிமை சட்ட மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடசென்னை, தென்சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் வெள்ளியன்று (டிச13) சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகம் அருகில் சட்டமசோதா நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் சுசீந்திரா தலைமை தாங்கினார். மாநிலப்பொருளாளர் தீபா, தென்சென்னை மாவட்டத்தலைவர் சுரேஷ், செயலாளர் ஆறுமுகம், வடசென்னை வட்டச்செயலாளர் சரவணத்தமிழன், மாவட்ட பொருளாளர் எஸ்.மஞ்சுளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.