தருமபுரி:
அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவிஉயர்வு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 5-வது மாநில மாநாடுகோரியுள்ளது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 5-வது மாநாடு டிச.20, 21 ஆகிய இருநாட்கள் தருமபுரி வன்னியர் மண்டபத்தில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் சி.அங்கம்மாள் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, அங்கன்வாடி ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி பணியாளருக்கு ரூ.21ஆயிரமும், உதவியாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக ஊழியர்களுக்கு ரூ.9ஆயிரமும், உதவியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும். ஓய்வு பெறும்ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும்.மழலையர் வகுப்புகளுக்கு அங்கன்வாடி ஊழியர்களையே ஆசிரியராக நியமிக்க வேண்டும்.10 ஆண்டுகள் பணிமுடித்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் பதவிஉயர்வும், 5 ஆண்டுகள்பணிமுடித்த உதவியாளர்களுக்கு அங்கன்வாடி பணியாளராக பதவிஉயர்வு வழங்கவேண்டும். தற்போது 25 ஆண்டுகள் பணிமுடித்தும் பதவிஉயர்வு கிடைக்காத ஊழியர்களுக்கு கிரேட்-1,பணியாளர் என அறிவித்து மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் வழங்கவேண்டும்.
10ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு கிரேட்-2 என அறிவித்து அதற்கேற்ப ஊதிய உயர்வு வழங்கவேண்டும்.அங்கன்வாடி மையத்தை தனியாருக்கு விடும் அரசு முடிவைகைவிடவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். ஜிபிஎப் பிடித்தம் தொகையை ஓய்வுபெறும் நாளில் அனைத்தையும் வழங்கவேண்டும்.பதவிஉயர்வில் சென்றவர்களுக்கும் உடனடியாக வழங்கவேண்டும். ஜிபிஎப் பிடித்தத்தில் இருந்து ஊழியர்களுக்கு கடன் வழங்க வேண்டும். அரசு பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி ரூ.1,500மற்றும் ரூ.750 ஐ உடனேவழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.விலைவாசி உயர்வுக்கேற்ப காய்கறி செலவினத்தை உயர்த்தி வழங்கவேண்டும்.சீருடைக்கு தையல் கூலி வழங்கவேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் இளநிலை உதவியாளராக அங்கன்வாடி ஊழியர்களை பணியமர்த்தவேண்டும் என்பது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
இம்மாநாட்டில் சங்கத்தின் புதிய மாநிலத் தலைவராக எஸ்.ரத்னாமாலா, பொதுச்செயலாளராக டி.டெய்சி,பொருளாளராக எஸ்.தேவமணி, துணைத் தலைவர்களாக எம்.பாக்கியம், எம்.சரோஜா, பி.சாரதாபாய், கெஜலட்சுமி, லட்சுமி, கோவிந்தம்மாள், ஜெயக்கொடி, மணிமேகலை, மணிமேகலை, இணைச் செயலாளர்களாக பா.சித்திரசெல்வி, சரஸ்வதி, நாகலட்சுமி, லில்லிபுஷ்பம், தவமணி,அமிர்தவள்ளி, ஹேமப்பிரியா ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். நிறைவாகஅகில இந்திய செயலாளர்ஏ.ஆர்.சிந்து நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம்.லில்லிபுஷ்பம் நன்றி கூறினார்.