tamilnadu

img

பொன்பரப்பி சம்பவம்: புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,ஏப்.24-பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவின்போது அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் ஆதிக்க சாதி வெறியர்களால் தாக்குதல் நடத்தப்பட்டத்தை கண்டித்தும், தாக்குதலுக்கு காரணமான ப.ம.கவினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்ககோரி இப்போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். சிபிஎம் மூத்த பிரதேசக்குழு உறுப்பினர் தா.முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,நீலகங்காதரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலச் செயலாளர் விசுவநாதன், மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகி பாஷிர், திராவிடர் கழக பிரதேசத் தலைவர் வீரமணி உட்பட திரளானோர் பங்கேற்றனர்.