மும்பை, ஏப்.4-
மோடியின் புகழ் பாடும் வகையில், உருவாக்கப்பட்டிருந்த ‘பிஎம்நரேந்திர மோடி’ என்றதிரைப்படம் வெள்ளிக்கிழமையன்று வெளியாவதாக இருந்தது. ஆனால், “பிஎம் நரேந்திர மோடி படம் ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியிடப்படவில்லை. விரைவில் அடுத்த அறிவிப்பு வெளியிடுவோம்” என்று தயாரிப்பாளர் பின்வாங்கியுள்ளார். இப்படத்தைத் திரையிடுவது, தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்று கூறியும், படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.