வாரணாசி:
இந்தியாவின் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி முதலிடத்தைப் பிடித்துள்ளது.இதனை மோடி அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே தெரிவித்துள்ளது.இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் மாசடைந்தநகரமாக காற்றின் தர அட்டவணையில் 276 புள்ளிகள் பெற்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி முதலிடம்பெற்றுள்ளது.தீபாவளி பண்டிகையின் போதுவெடிக்கப்படும் பட்டாசு புகையால்வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் மாசு அளவு மிக அபாய கட்டத்தை தாண்ட வாய்ப்புள்ளதாகவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வாரணாசியானது, பிரதமர் மோடிஇரண்டு முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியாகும். அவரின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட தொகுதியாகவும் இது கூறப்பட்டது. ஆனால் மோடியின் ‘தூய்மை இந்தியா’, ஒரு வாய்ப்பந்தல் திட்டம் என்பதற்கு பிரதமரின் சொந்தத் தொகுதியே உதாரணமாகி இருக்கிறது. பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்ட புகழ்பாடி வரும் அவரது ஆதரவாளர்களுக்கு, இந்தச் செய்தி அதிர்ச்சியையும் ஏற் படுத்தியுள்ளது.இதனிடையே, கோவளம் கடற்கரை, மாமல்லபுரம் கடற்கரைகளை எல்லாம் தூய்மைப்படுத்தி, மாசுபாட்டைக் குறைத்த பிரதமர் மோடி,பாவம் அவரது சொந்தத் தொகுதியான வாரணாசியை மறந்து விட்டார் என்று வலைத்தளவாசிகள் பலர் சமூகவலைத்தளங்களில் கிண்டல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.