tamilnadu

img

கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை பெரியளவில் பலனளிக்காது...  எய்ம்ஸ் மருத்துவமனை அதிர்ச்சி தகவல்...

தில்லி 
நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளான நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பிளாஸ்மாவும் ஒன்று. இந்த பிளாஸ்மா சிகிச்சை என்னவென்றால் கொரோனாவிலிருந்து மீண்டவர்களிடம் இருந்து முக்கிய செல்கள் மற்றும் ரத்த அணுக்களை பெற்று அதனை புதிதாக வரும் நோயாளிகளுக்கு அளிப்பது. இந்த சிகிச்சை மூலம் பலர் கொரோனாவிலிருந்து தேறி வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், பிளாஸ்மா சிகிச்சை பெரியளவில் பலனளிக்காது என எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

இதுகுறித்து அவர் விரிவாக கூறியதாவது,"பிளாஸ்மா சிகிச்சையின் பலன் குறித்து ஆராய்வதற்கு தலா 15 நபர்கள் கொண்ட 2 குழுவாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவிற்கு தற்போது மருத்துவ நெறிமுறை சிகிச்சையும், மற்றொரு குழுவிற்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பிளாஸ்மா சிகிச்சை பாதுகாப்பதானது, பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத சிறப்பு உடையது. ஆனால் 2 குழுவிலும் ஒரே மாதிரியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பிளாஸ்மா சிகிச்சை பெரியளவில் பலன் தரவில்லை" என அவர் கூறியுள்ளார்.

கொரோனா சிகிச்சையில் மக்களுக்கு பெரிய நம்பிக்கையாக இருப்பது பிளாஸ்மா சிகிச்சை தான். அதற்கும் கொரோனா செக் வைத்துள்ளது.