tamilnadu

img

புல்வாமா தாக்குதல் திட்டமிட்ட சதி...? பாகிஸ்தானுடன் மோடிக்கு ரகசிய உறவு... கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுதில்லி, ஏப்.11-பிரதமர் மோடிக்கு தேர்தலில் உதவுவதற்காகவே, புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியதோ? என்ற சந்தேகம் எழுவதாக, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சில நாட்களுக்கு முன்பு செய்திநிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீர் பிரச்சனையை பேசித் தீர்க்க மிகுந்தஅச்சப்படலாம். ஆனால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நிச்சயமாக காஷ்மீர் பிரச்சனையை பேசித் தீர்க்க முயற்சி எடுப்பார்கள்” என்று தெரிவித்திருந்தார்.இதையொட்டியே கெஜ்ரிவால் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.“பாகிஸ்தானும், இம்ரான் கானும்வெளிப்படையாகவே மோடிக்கு ஆதரவு அளித்ததன் மூலம், அவர்களுடன் மோடிக்கு இருக்கும் ரகசிய உறவுஅம்பலமாகி இருக்கிறது; அதுமட்டுமன்றி, மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு உதவுவதற்காகவே கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி, புல்வாமாவில் நமது துணிச்சல் மிகுந்த 40 சிஆர்பிஎப் வீரர்களை பாகிஸ்தான் கொன்றதோ? என்ற சந்தேகமும் எழுகிறது” என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் மோடிக்கு, இம்ரான் கான் அளித்துள்ள ஆதரவு குறித்து,பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபாமுப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின்தலைவர் உமர் அப்துல்லா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், கர்நாடக முதல்வருமான எச்.டி. குமாரசாமி ஆகியோரும் கேள்விஎழுப்பியுள்ளனர்.