tamilnadu

img

கொரோனாவுக்கு மருந்தா; நாங்க எப்ப சொன்னோம்..?

டேராடூன்:
கார்ப்பரேட் சாமியாரான ராம்தேவ், தனது ‘பதஞ்சலி நிறுவனம்’ கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறி, ஜூன் 23 அன்று ‘கொரோனில் அண்ட்ஸ்வாசரி’ (Coronil & Swasari) என்ற ஆயுர்வேத மருந்தை உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அறிமுகப்படுத்தினார். 

95 நோயாளிகள் மீது பரிசோதித்துப் பார்த்தபோது, 3 நாட்களில் 69 சதவிகித நோயாளிகளும், 7 நாட்களுக்குள் 100 சதவிகித நோயாளிகளும் குணமடைந்துவிட்டனர் என்றும் கூறியிருந்தார்.ஆனால், பதஞ்சலி கூறும் மருந்தின் கூட்டுத்தன்மை என்ன; கொரோனாவுக்கு எதிரான இந்த மருந்தின் சோதனை எங்கே நடத்தப்பட்டது? என்று கேள்விகளை எழுப்பிய மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம், பதஞ்சலி அதன் ‘கொரோனில் மருந்து’தொடர்பான விளம்பரங்கள், அறிவிப்புகளுக்கு தடை விதித்தது.
மறுபுறத்தில் போலி மருந்து மூலம் மக்களின் உயிரோடு விளையாடுவதாக எழுந்தபுகார்களின் பேரில், ‘பதஞ்சலி’ நிறுவன முதலாளிகள் பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் மீது ஐபிசி 420, 120பி,270 ஆகியோர் மீது ஜெய்ப்பூர், முசாபர்பூர் ஆகிய இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், “எங்களது மருந்தான‘கொரோனில் ஸ்வாசரி’ கொரோனாவை குணப்படுத்தும் என்றோ, கட்டுப்படுத்தும் என்றோ நாங்கள் சொல்லவே இல்லை; எங்கள் மருந்தைச் சோதித்ததில் கொரோனா நோயாளிகள் குணமடைந்ததாக மட்டுமே தெரிவித்தோம்” என்று பதஞ்சலி சிஇஓ பாலகிருஷ்ணா பின்வாங்கியுள்ளார்.