புதுதில்லி, ஆக. 28 - இந்தியா - சீனா இடையே போர் ஏற்பட்டால், நிச்சயமாக பாகிஸ்தானும் அதில் பங்கேற் கும் என்று பஞ்சாப் முதல் வரும், முன்னாள் ராணுவ கேப்டனுமான அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை செய்துள்ளார். இதுதொடர்பாக ‘இந்தி யன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டின் ஆன் லைன் உரையாடல் ஒன்றில் அவர் மேலும் கூறியிருப்ப தாவது: லடாக்கில் சீன ஊடுருவல் என்பது அவர்களின் தசையை வலிமைப்படுத்துவது போல் இருக்கிறது. கல்வானில் அவர் களின் ஊடுருவல் ஒன்றும் புதிதல்ல. 1962-ஆம் ஆண்டும் அவர்கள் கல்வானிற்கு வந்தார்கள். ஆனால் இப் போது நாம் 10 படைப்பிரிவு களுடன் தயார் நிலையில் இரு க்கின்றோம். அதையும் தாண்டி சீனர்கள் உள்ளே வந்தால் ஏமாற்றம் அடைவது உறுதி. 1976-இல் பெற்றதைப் போல், இரண்டாவது முறை யும் அவர்கள் பதிலடி வாங்கு வார்கள். ஆனால், சீனாவை சமாளிக்க மலைப்பகுதிகளில் படைவீரர்கள் நிறுத்தப்படு வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இன்னும் நடை முறைக்கு அது வரவில்லை. மற்ற கமண்டோ பிரிவு களில் இருந்தும் படைகளை லடாக்கிற்கு அனுப்ப வேண்டும். இந்திய ராணு வத்தை வலுப்படுத்த இந்திய அரசு வளங்களை காண வேண்டும். நாம் பலமாக இருந் தால் மற்றவர்கள் ஒரு முறைக்கு மூன்று முறை யோசிப்பார்கள். அதேபோல, இந்தியா - சீனா இடையே போர் ஏற்பட் டால், நிச்சயமாக பாகிஸ் தானும் அதில் பங்கேற்கும். இதை நாம் கட்டாயமாக கவ னத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.