புதுச்சேரி, ஜன. 9- புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் நியமனம் விவகாரத்தில் தலைமைச் செயலர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் மீது உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காலியாக இருந்த மாநில தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பால கிருஷ்ணனை பேரவை உறுப்பினர்க ளின் ஒப்புதலோடு சட்டப்பேரவை யில் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். துணை நிலை ஆளுனர் உத்தரவின் பேரில் ஆணையரை தேர்வு செய்யும் உள்ளாட்சித்துறை விளம்பரம் சட்டப் பேரவையின் அனு மதியோடு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக அமைச்சரவையிலும் முடிவு எடுத்து, அரசிதழிலும் வெளி யிடப்பட்டது. மாநில தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட பால கிருஷ்ணன், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புகார் செய்ததைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம், தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைத்து, அகில இந்திய அளவில் மீண்டும் விளம்பரம் செய்து, மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியது. அதனடிப்படையில் மாநில தேர்தல் ஆணையரை நியமிப்ப தற்கான புதிய விளம்பரம் கடந்த 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
உரிமை மீறல் புகார்
இது சட்டமன்றத்தின் உரிமையை, மீறுவதாக உள்ளது என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி, புதுச்சேரி பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவிடம் மனு அளித்தார். அந்த மனுவில், மாநில தேர்தல் ஆணையர் தற்போது பணியில் இருக்கும் நிலையில் விண்ணப் பங்கள் கோருவது தொடர்பாக 7 ஆம் தேதி உள்ளாட்சித் துறை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்துள்ளது உரிமையை மீறிய தாகும். மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 27. 9. 18 அன்று அமைச்சரவைக்கும், முதலமைச்ச ருக்கும் நிதி அதிகாரம் பகிர்ந்து அளிப்பது தொடர்பாக உத்தர விட்டும், இன்றுவரை அது அமல்படுத்தப்படவில்லை. மற்றும் 3. 5. 18 தேதியிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தில் தேவநீதிதாசை ஆலோசகராக நிய மிக்கலாம் என்று உத்தரவிட்டதற்கு மாறாக அவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே உரிமை மீறலில் ஈடுபட்ட புதுச்சேரி தலைமைச் செயலர், உள்ளாட்சித்துறை செயலர், இயக்கு னர், சார்பு செயலர் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.