15 ஆண்டுகளில் இல்லாத படுவீழ்ச்சி
புதுதில்லி, நவ.23- இந்தியாவில் புதிய முதலீடுகள், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அள விற்கு வீழ்ச்சியைச் சந்தித்து இருப்ப தாக ‘கேர் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் ஆய்வ றிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் செயல்படுத்தப்படும் புதிய முதலீட்டுத் திட்டங்கள், முதலீடு செய்யப்படும் தொகை குறித்த விவரங்களை ‘கேர் ரேட்டிங்ஸ்’ (Care rating) நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், “2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில், ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி வரையில் முதலீடுகள் வந்தி ருந்தது. ஆனால், நடப்பு 2019-20 நிதி யாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை யிலான அதே ஆறு மாதங்களில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கோடி மட்டுமே புதிய திட்டங்களில் முதலீடு செய்யப் பட்டுள்ளது; இது கடந்த 15 ஆண்டு களில் இல்லாத மிகக் குறைந்த முத லீட்டு அளவாகும்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) முதலீடு களின் மதிப்பு 29 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்றும், 2018-19 நிதி யாண்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளில் அரசின் பங்களிப்பு 36 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாகவும் ‘கேர் ரேட்டிங்ஸ்’ கூறியுள்ளது. 2014-15ஆம் ஆண்டில் அரசின் பங்களிப்பு 56 சதவிகிதமாக இருந்ததையும் அது சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் தனியார்துறை முதலீட்டு மதிப்பு 44 சதவிகிதத்திலிருந்து 64 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தனியார் துறை முதலீடுகள் 23 சதவிகிதத்திலிருந்து 77 சதவிகிதமாக உயர்ந்துள்ளன. உற்பத்தித் துறையில் மேற் கொள்ளப்படும் முதலீடுகள் அதி கரித்துள்ளன. சேவைகள் துறையிலும் மின்சாரத் துறையிலும் வீழ்ச்சி ஏற் பட்டுள்ளது. புதிய முதலீடுகளும் நுகர்வும் குறைந்து வருவதால் இந்தியப் பொரு ளாதார வளர்ச்சி, மிக மந்தமாக இருப்ப தாக ‘கேர் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் தெரி வித்துள்ளது.