tamilnadu

img

காரில் பயணிகளுக்கும் முகக்கவசம் கட்டாயம் -  தில்லி சுகாதாரத்துறை

காரில் பயணிகளுக்கும் முகக்கவசம் கட்டாயம்  என்று தில்லி சுகாதாரத்துறை  அறிவித்துள்ளது. 
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் தலைநகர் தில்லியில் கொரோனா தொற்று 3 வது முறையாக அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கொரோனா பரவலைத் தடுக்க தில்லி அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார. இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இந்த நிலையில் முகக்கவசம் தொடர்பாக டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின் இன்று கூறுகையில், "முகக்கவசம் அணியாதோருக்கு ரூ.2000 அபராதம் விதிப்பது தொடர்பான உத்தரவு நகல் இன்று மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுவிடும். வீட்டிலிருந்து வெளியில் இறங்கும்போதே முககவசத்துடன் வருவதை மக்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். காரில் பயணிக்கும்போதும் முகக்கவசம் அணிவது நல்லது.

இன்று முதல், கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிகுறி உடையவர்கள் கண்டறியும் நடவடிக்கை தொடங்கியிருக்கிறது.

இவ்வாறு சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின் கூறினார்.