tamilnadu

பாலியல் துன்புறுத்தலை தடுக்க புதுவையில் குழு

புதுச்சேரி,மார்ச் 4- பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலை தடுக்க குழு  அமைப்பதற்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கை:- பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலை தடுத்தல், தடை  செய்தல் மற்றும் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு 2013 ஆம்  ஆண்டு ஒரு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டப்படி 10 பெண்களுக்கு  மேல் பணிபுரியும் இடங்களில் இச்சட்டத்தின் பிரிவு 4-ன் படி அங்கு  பணிபுரியும் ஒரு பெண் உயர் அதிகாரியை தலைவராகக் கொண்டு, குறைந்தபட்சம் 2 பெண் ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன  உறுப்பினர்களைக்  கொண்ட ஒரு குழு அமைக்க வேண்டும்.  இந்த குழு புதுச்சேரியில் அனைத்து அலுவலகங்கள், பணியிடங்க ளில் அமைக்க வேண்டும். அந்த குழு யாரை உறுப்பினர்களாகக் கொண்டு  இயங்குகிறது என்பதை தெளிவுபடுத்தி அந்த நிறுவனங்களிலோ அல்  லது அலுவலகங்களிலோ தகவல் பலகையில் வெளியிட வேண்டும். இந்த அறிக்கையை மாவட்ட ஆட்சியர் மற்றும் துறையின் மாவட்ட  அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இச்சட்டத்தின் பிரிவு 26 இன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.